புதிய தொழில் மனைகளை வாங்க விரும்புவோர் சிட்கோ நிறுவனத்தின் காலி மனைகள் ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், வாழவந்தான் கோட்டை மற்றும் கும்பக்குடி கிராமத்தில் மற்றும் மணப்பாறை வட்டம், சத்திரப்பட்டி மற்றும் கண்ணுடயான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான கீழ்கண்ட தொழிற்பேட்டைகளில் காலி தொழில் மனைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது.
வ.
எண்.
|
தொழிற்பேட்டையின்
பெயர்
|
காலி தொழில் மனைகளின்
எண்ணிக்கை
|
1 | வாழவந்தான் கோட்டை
|
13 |
2 | மணப்பாறை
|
31 |
3 | கும்பக்குடி
|
1 |
புதிதாக தொழில் தொடங்க தொழில் மனைகளை வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தாங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் தமிழ்நாட்டில் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலி மனைகள் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்து கொண்டு தேவையானவற்றை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட காலி தொழில் மனைகளை பார்வையிட, திருச்சி, அரியமங்கலம் சிட்கோ தொழிற்பேட்டை கிளை மேலாளரை நேரிலோ அல்லது 9445006575 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது bmtry@tansidco.org என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.