தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பில் வீரமாமுனிவர் பிறந்த நாள் விழா

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்த இத்தாலி நாட்டு வித்தகர்  வீரமாமுனிவரின் பிறந்தநாள் விழா தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வீரமாமுனிவா் பிறந்த நாள் விழாசுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்ற வீரமாமுனிவர் 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப தேம்பாவணி என்ற பெருங்காவியத்தையும்  இயற்றியவர்.

அங்குசம் இதழ்..

எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்து தமிழில் மறுமலர்ச்சியை விதைத்தவர். வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் அவருடைய திருஉருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியும் விழா கொண்டாடப்பட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வீரமாமுனிவர் பிறந்த நாள் விழாசெப்பர்டு விரிவாக்கத்துறை இயக்கநர் அருள்முனைவர் சகாயராஜ் தலைமை வகித்து உரையாற்றி மலரஞ்சலி செலுத்தினார். அவரது உரையில் நமது கல்லூரி போன்ற பெரிய வளாகத்தில் வீரமாமுனிவர் குறித்த ஆய்வு இருக்கை உருவாக வேண்டும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அங்கிருந்து எண்ணற்ற ஆய்வுகள் வெளிவர வேண்டும். அத்தகைய முயற்சிக்கு நமது கல்லூரித் தமிழாய்வுத்துறை முன்முயற்சி எடுக்க வேண்டும் என்கிற கருத்தைப் பதிவு செய்தார்.

வீரமாமுனிவர் பிறந்த நாள் விழாகல்லூரியின் துணை முதல்வர்கள் முனைவர் அலெக்சாண்டர் பிரவீன் துரை, முனைவர் இருதயராஜ், திருமதி பாக்கிய செல்வரதி,  மற்றும் முனைவர் ஜோசப் சகாயராஜ் முனைவர் சீனிவாசன், முனைவர் வில்சன் உள்ளிட்ட தூய வளனார் கல்லூரித் தமிழாய்வாத்துறை பேராசிரியர்கள், தேசியக் கல்லூரி, புனித சிலுவை கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும்  முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

 

 – ஆதன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.