அரசு பேருந்துகளில் “G-Pay” வில் டிக்கெட் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சரியாக இரவு 12:30 மணி! திருநெல்வேலியிலிருந்து பாவுர்சத்திரம் அருகில் செல்ல வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் நுழையும் போதே குற்றாலம் செல்லும் பேருந்து மெதுவாகக் கிளம்பியது. அவசரமாக ஓடி பேருந்தைப் பிடித்து ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டே பர்ஸை திறந்தால், ஒரே ஒரு கசங்கிய 20 ரூபாய் மட்டும் பாவமாய் இருந்தது. அப்போதுதான் ATM செல்லாமல் வந்தது நினைவுக்கு வந்தது. பதறியபடி சில்லறைகளைத் தேடினால் 20 ரூபாயயும் சேர்ந்து 42 ரூபாய் தேறியது… மெதுவாகப் பக்கத்திலிருந்தவரிடம் கூகிள் பே செய்கிறேன் ஒரு 50 ரூபாய் டிக்கட் எடுக்க தர முடியுமா என்றேன்.

கூகிள் பே டிக்கெட்
கூகிள் பே டிக்கெட்

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

டிக்கெட்டே கூகிள் பே செய்து வாங்கிக் கொள்ளலாம் என்றார். நானும் ஸ்கேன் தான் என்றார். அடடா இது எப்ப இருந்து என்றேன். இரண்டு நாட்களாக நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொன்னார். சில்லறையெல்லாம் பைக்குள் கொட்டிவிட்டு கண்டக்டரிடம் இடத்தை சொல்லி கூகிள் பே என்றேன். UPI தான சார் என்று சொல்லிவிட்டு டப் டப் என்று மிசினை தட்டி QR கோட் காண்பித்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அறிது

என்கிற திருக்குறள் எழுதிய போர்டு, பளிச்சென்று தெரிந்தது!

சிவசங்கர் சா.சி. அண்ணே… நீங்க எங்கயோ போய்டிங்க… நன்றிகள் கோடி!

 

—  காட்டாத்தூர்‌‌ எஸ்.பிரதீப்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.