அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருமலை நாயக்கர் மஹால் – மதுரையின் மன்னர் நினைவின் மாபெரும் அதிசயம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஆனால் அந்த கோவிலுக்கு அருகில் இன்னொரு அதிசய கட்டிடம் உள்ளது. அது தான் திருமலை நாயக்கர் மஹால். அது ஒரு மஹால் மட்டுமல்ல… வரலாறு, கலையழகு, சினிமா மாயாஜாலம் என அனைத்தும் ஒன்றாக கலந்த ஒரு மரபுக் கண்ணாடி!

வரலாற்றின் அடையாளம் திருமலை நாயக்கர் மஹால், மதுரையை ஆட்சி செய்த நாயக்க வம்சத்திலிருந்து வந்த மன்னர் திருமலை நாயக்கரால், பொ.ஊ. 1636-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அந்த காலத்தில் மதுரை ஒரு முக்கிய அரச மையமாக இருந்தது. திருமலை நாயக்கர் தன் ஆட்சிக் காலத்தில் கலையும், கட்டிடக் கலைவும், பண்பாட்டும் வளர்ச்சியடைய பெரும் பங்கு வகித்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

திருமலை நாயக்கர் மஹால்
திருமலை நாயக்கர் மஹால்

இந்த மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கில் அமைந்துள்ளது. அந்தக் காலத்தில் இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரின் ஆலோசனையுடன் இது வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் இதில் இந்தோசரசனிக் பாணி எனப்படும் இந்திய மற்றும் முகலாயக் கலையின் கலவையைப் பார்க்கலாம்.

https://www.livyashree.com/

கட்டிடக் கலை மற்றும் அமைப்பு மஹாலின் உயரம் 58 அடி! அந்த மண்டபத்தை தாங்கும் தூண்கள் 248 ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான வட்ட வடிவத்துடன் செதுக்கப்பட்டவை. தூண்களின் மேல் வளைந்த வளைவுகள், கூரைகளில் வரையப்பட்ட சிவன், விஷ்ணு சம்பந்தமான புராண ஓவியங்கள்  இவை அனைத்தும் அந்த காலத்திலிருந்த கலை நுணுக்கத்தின் சான்றுகள்.

இந்த மஹால் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது: சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடம். அரங்க விலாசம்  அவரது தம்பி முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடம்.

மகாலின் உள்ளே இசை மண்டபம், நாடக அரங்கம், பல்லக்குச் சாலை, ஆயுதசாலை, பூங்காக்கள், தடாகங்கள் என அனைத்தும் இருந்தன. மன்னர்களுக்கான பெருமை, பண்பாட்டு நிகழ்வுகளுக்கான இடம் என இது ஒரு சிறிய ராஜ்யம் போல இருந்தது. ஒளி மற்றும் ஒலி மாயாஜாலம் 1971-ஆம் ஆண்டு இம்மஹால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1981-ஆம் ஆண்டு முதல் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் ஒலி–ஒளி நிகழ்ச்சி (Sound & Light Show) தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருமலை நாயக்கரின் வாழ்க்கை வரலாறும், மதுரை நகரின் பெருமையும் ஒலியிலும் ஒளியிலும் அழகாக சொல்லப்படுகிறது. தினமும் மாலை 6.45க்கு ஆங்கிலத்திலும், இரவு 8 மணிக்கு தமிழிலும் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பது ஒரு அற்புத அனுபவம்.

திரைப்பட உலகின் பிரபல இடம் திருமலை நாயக்கர் மஹால் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானது! 90’s மற்றும் 2000’s காலங்களில் பல பிரபலமான பாடல்கள் இங்கே படமாக்கப்பட்டன. அந்த மண்டபத்தின் ஒளி, தங்க நிற கூரைகள், பெருமை மிக்க தூண்கள்  எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு பாடலையும் கனவாக மாற்றின.

“கண்ணாலனே” – பாம்பே (Bombay)

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“தேரே பினா” – குரு (Guru)

“வெள்ளி மலரே” – ஜோடி (Jodi)

“ரகசிய கனவுகள்” – பீமா (Bheema)

“விழிகளிலே” – குள்ளநரி கூட்டம் (Kullanari Kootam)

இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் அந்த மண்டபத்தை நம்ம மனதில் நிலைத்த படிமமாக்கி விட்டன. 90’s kids க்கு இந்த மஹால் ஒரு “cinematic heaven” தான் தொலைக்காட்சியில் இந்த பாடல்கள் வந்தாலே அந்த மஞ்சள் ஒளியில் மிளிரும் தூண்கள் நினைவில் மிதக்கும்!

இன்றும் பல YouTube vloggers மற்றும் Instagram reels creators இங்கே வந்து தங்களின் வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். அதனால், திருமலை நாயக்கர் மஹால் இன்று வரை புதிய தலைமுறைக்கும் ஒரு reel-worthy royal backdrop!

இன்றைய பெருமை மற்றும் பராமரிப்பு இன்று திருமலை நாயக்கர் மஹால் மதுரையின் முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் வெளிநாட்டு பயணிகள் இதை பார்வையிட வருகின்றனர். அரசு, மஹாலின் பழமைத் தன்மையை காக்கும் வகையில் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

மதுரை சென்றாலே மீனாட்சி அம்மன் கோவிலுடன் சேர்த்து, திருமலை நாயக்கர் மஹாலைப் பார்க்காமல் திரும்புவது ஒரு அழகை விட்டுச் செல்வது போல! இது கலை, வரலாறு, ஆன்மிகம், சினிமா அனைத்தையும் ஒன்றாகக் கலந்த ஒரு உயிருள்ள நினைவுச் சின்னம்.

 

 -மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.