திருவண்ணாமலை தேரோட்டம் …! விண் அதிரும் அரோகரா முழக்கம் …!
கார்த்திகை மாத தீபத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று , பஞ்ச மூர்த்திகள் தேரோட்டங்கள் வெகு விமரசியாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு தேரினை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தித் தரும் ஸ்தலமாகவும் விளங்கி வருவது “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்’ . இந்த திருக்கோயிலில் “கார்த்திகை தீப திருவிழா’ உழக பிரசித்தி பெற்றது .
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா கடந்த 24- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரசியாக நடைபெற்று வருகிறது.
10 – நாட்களாக நடைபெறும் தீபத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, (30- ந்தேதி) அதிகாலை பராசக்தியம்மன் , அண்ணாமலையார் , உண்ணாமுலையம்மன், விநாயகர், முருகர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு திருக்கோயிலிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
பின்பு, கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்த பஞ்ச மூர்த்திகள் கோயிலின் ராஜகோபுரம் முன்புள்ள தேர்களில் எழுந்தருளினர்கள் .
முதல் தேராக காலை 6 மணிக்கு விநாயகர் தேரும் தொடர்ந்து முருகர் தேர் மாடவீதிகளில் வலம் வந்து பிறகு புறப்பட்ட இடத்தில் தேர் நிலை திருத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து , மாலை 4 – மணியளவில் உண்ணாமலை அம்மன் சமேதக அண்ணாமலையார் அருள் பாலித்த “மகா ரதத்தை” பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ .. ‘உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’.. என விண் அதிர முழக்கமிட்டு ஆண்கள் ஒருபக்கம் பெண்கள் ஒரு பக்கமும்’ வடம்பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
பின்பு இரவு 9 மணியளவில் பராசக்தி அம்மன், தேரோட்டம் நடைபெற்றது. “பராசக்தி அம்மன் தேரை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுப்பது இவ்விழாவின் சிறப்பு”
இறுதியாக சிறுவர்களால் இழுக்கப்படும் சண்டிகேசுவரர் தேரோட்டம் மறுநாள் 31-ந்தேதி அதிகாலை நிறைவு பெற்றது தேர்த் திருவிழா.
இந்த பஞ்ச ரத தேரோட்டங்களை, காண காலை முதலே திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தபடி திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர்.
தேரோட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்
— மணிகண்டன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.