திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கண்கொள்ளாகாட்சி ! !

0

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

டைட்டானிக் கப்பல் திருச்சியில கரை ஒதுங்கினா எப்படி இருக்கும் ? அட, ஆமாங்க. காலத்தால் அழியாத காதல் காவியமான டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற அதே கப்பலை தத்ரூபமாக, திருச்சிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்  பத்ரி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தார்கள்.

பொதுமக்கள் கண்டு களிக்கவும் குதூகலிக்கவும் பொருட்காட்சிகளை நடத்திவரும் பத்ரி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில், திருச்சியில் நடத்தப்படும் பொருட்காட்சிதான் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி.

எந்த இடத்தில் ? 

திருச்சி கே.கே.நகர் செல்லும் வழியில் எல்.ஐ.சி. காலனி, சபரி மில்ஸ் பகுதியில் இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது.

எத்தனை நாள் நடக்கிறது ?

ஜூலை 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் – 7 ம் தேதி வரை (29.07.2025 முதல் 07.09.2025) 

நேரம் ?

தினசரி மாலை 4:30 முதல் இரவு 10 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

திருச்சியில் டைட்டானிக் கப்பல்
திருச்சியில் டைட்டானிக் கப்பல்

டைட்டானிக் கப்பலை தாண்டி, இந்த பொருட்காட்சியில் என்ன விசேசம்னுதானே கேட்கிறீர்கள்? உங்க குட்டீஸ்களையும் கூட்டிகிட்டு குதூகலமாக ஒரு மாலை வேளையை குடும்பத்தோட அனுபவிக்க தரமான பொருட்காட்சி இது. டைட்டானிக் கப்பலில் பயணிப்பது போன்ற அனுபவத்தை வழங்குகிறது, அதன் பிரம்மாண்டம்.

வழக்கம்போல பொருட்காட்சிகள் என்றாலே, குட்டீஸ்கள் எதிர்பார்க்கும் ஜெயண்ட்  வீல், ஜிக் ஜாக்  ராட்டினம் , கொலம்பஸ் கப்பல், வாட்டர் போட் , பலூன் ஜம்பிங் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. சிறுவர், சிறுமிகளை கூடுதலாக மகிழ்விக்க மினி ஹெலிகாப்டர், கார், பைக் ராட்டினங்கள், பேய் வீடு, பனி உலகம், டிஸ்கோ கோஸ்டர் போன்ற விளையாட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன. டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி போன்ற சமாச்சாரங்களும் உண்டு. இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பேன்ஸி, வீட்டு உபயோகப் பொருட்களையும் டிசைன் டிசைனாக குவித்திருக்கிறார்கள்.

திருச்சியில் டைட்டானிக் கப்பல்
திருச்சியில் டைட்டானிக் கப்பல்

இதையெல்லாம்விட,  பாட்டிற்கு ஏற்ப நடனமாடும் ரோபாட்டிக் நாய்களும், போட்டோ எடுத்து உடனே தரும் பெண் ரோபோவும் உங்களுக்கு புது அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்.

அப்புறம் என்ன?

குடும்பத்தோட குதூகலமாக கொண்டாட கிளம்ப வேண்டியதுதான் என்கிறீர்களா?

திருச்சியில் டைட்டானிக் கப்பல் திறப்பு விழா
திருச்சியில் டைட்டானிக் கப்பல் திறப்பு விழா

பொருட்காட்சியை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் :

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைக்க, திறப்புவிழா நிகழ்வில்  திமுக  நகர செயலாளர் மதிவாணன், பொருட்காட்சி சங்கத் தலைவர் அன்வர் ராஜா, செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் சலீம், பொருட்காட்சி வடிவமைப்பாளர் மதுரை சரவணன், பெரம்பலூர்  நளபாகம் குழுவினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  திருச்சி மக்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என்கிறார்,  பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுதாகர்.

-இரா.சந்திரமோகன்.

Leave A Reply

Your email address will not be published.