அசிங்கமா போச்சு குமாரு ! வந்த வேகத்தில் திரும்பப் பெறப்பட்ட ஆளுநரின் வாய்மொழி உத்தரவும் பல்கலை சுற்றறிக்கையும் !

பல்கலைக் கழங்களின் துணை வேந்தர்களைத் தவறாக வழிநடத்துவது, அல்லது அச்சுறுத்துவது போன்ற செயல்களில்  ஆளுநர் மாளிகை ஈடுபடுவதாக இருந்தால், ஆளுநர் மாளிகையின் வரம்பு மீறுதலைத் தடுக்க சட்டரீதியான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.‌

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அசிங்கமா போச்சு குமாரு ! வந்த வேகத்தில் திரும்பப் பெறப்பட்ட
ஆளுநரின் வாய்மொழி உத்தரவும் பல்கலை சுற்றறிக்கையும் !

ளுநர் மாளிகையிலிருந்து வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்ட கட்டளையை ஏற்று, கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்த விவரங்களை சேகரித்து அனுப்புமாறு உறுப்பு கல்லூரிகளுக்கு பல்கலை நிர்வாகத்தின் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதும்; மேற்படி சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்ட வேகத்திலேயே திரும்ப பெறப்பட்டதும் தமிழக அரசியல் தளத்தில் தணல் மூட்டியிருக்கிறது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

கடந்த மார்ச் 11 அன்று சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர்களை அழைத்து நடத்திய கூட்டத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் நூறு சதம் தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியம் குறித்து ஆளுநர் சிறப்பு வகுப்பு நடத்தியிருந்ததையடுத்துதான் மேற்படி சுற்றறிக்கை வெளியாகியிருக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக, கல்வியாளரும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலருமான பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, விரிவான அறிக்கையின் வாயிலாக கடுமையான கண்டணத்தை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளையுன் முன்வைத்திருக்கிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள கால கட்டத்தில் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்த விவரத்தை  ஆளுநர் மாளிகை ஏன் கேட்கிறது? பல்கலைக்கழகம் ஏன் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களைச் சேகரிக்கிறது?

சந்தேகத்தை ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

ஆளுநர் வாய்வழி உத்தரவின் மூலம் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் கேட்பதாகவும், உடனே சேகரித்து அனுப்புங்கள் என்றும் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தனது ஏற்பில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது என்றாலும் இந்த நடவடிக்கை அசாதாரணமான நடவடிக்கை. இத்தகைய நடவடிக்கை எத்தகைய உள்நோக்கத்தைக் கொண்டது? பல்கலைக்கழகத்தின் பணிகளுக்குத் தொடர்பில்லாத இத்தகைய நடவடிக்கை பல்கலைக்கழகத்தால் ஏன் மேற்கொள்ளப்பட்டது?  என்பதைத் தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும்.

இறையாண்மை கொண்ட இந்திய மக்கள் என்று கருதாமல், வெறும் “வாக்காளர்களாக” இந்திய மக்களைத் தமிழ்நாடு ஆளுநர் பார்க்கிறார் என்பது மிகவும் கவலை தரும் செய்தி.

கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களை சேகரிக்க கோரும் சுற்றறிக்கை.

மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம், உயிர்ப்புடன் இயங்கும் ஜனநாயகம் (Participative Democracy, functional democracy) ஆகிய சொற்களுக்கு எந்த அளவு ஆளுநர் பொருள் உணர்ந்து இருக்கிறார் என்பது தெரியவில்லை.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மக்களாட்சி மாண்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்குரிய பயிற்சியினைக் கல்வி வளாகங்களில் வழங்க வேண்டும்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவைத் தேர்தலை முறைப்படி நடக்க அனுமதிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆரோக்கியமான விவாதம் நடத்தும் சூழலை உருவாக்குவது, தேர்தலில் அனைவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து தவறாமல் வாக்களிப்பது‌, எந்தெந்த உயர்கல்வி நிறுவனத்தில் ஆரோக்கியமான விவாதத்துடன் முழுமையாக வாக்குப்பதிவு நடந்து, அனைத்து மாணவர்களும் பங்கேற்று, தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்களோ,  அத்தகைய உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர் பேரவைக்கு  ஊக்கம் அளிக்கும் விதத்தில் விருதுகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் வாலிப வயதில் அரசைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தலில் எவ்வாறு நாம் நமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த முடியும்.

அரசின் கொள்கைகள், சட்டங்கள், நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆகியவற்றை விவாதிக்க, விமர்சிக்க, மாற்றுக் கொள்கைகளை முன்வைக்க உரிய வாய்ப்புகளைக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வழங்கினால் அதுவே மக்களாட்சி மாண்புகளை உணர்ந்திட மிகப்பெரும் பயிற்சியாக, அனுபவமாக மாணவர்களுக்கு அமையும்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இறையாண்மை கொண்ட இந்திய மக்கள், தங்களின் வாக்குச் சீட்டின் வாயிலாக, தாங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதி மூலம்,  அரசிற்கு இறையாண்மையைத் தருகின்றனர்.‌

இந்திய அரசமைப்புச் சட்டம் இறுதி இறையாண்மையை மக்களிடம் தந்துள்ளது. ஜனநாயகக் குடியரசில் மக்களிடம் இருந்தே அரசிற்கு இறையாண்மை கிடைக்கின்றது.‌ தாங்கள் தேர்ந்தெடுத்த அரசு, தனக்கு அளித்த வாக்குறுதிப்படி நடக்கிறதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களின் படி ஆட்சி செய்கிறதா? என்று கண்காணிக்கும் பொறுப்பு அரசைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உள்ளது.

எந்த அளவு மக்கள் விழிப்புடன் இருக்கின்றனரோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வலுவாக இருக்கும். இவற்றைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், மாணவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டார்களா? வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்களா?  மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் கல்லூரியிடம் இருக்கிறதா? என்று ஆளுநர் கேட்பதும், உடனே பல்கலைக் கழகம் இத்தகைய தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதும் மிகவும் ஆபத்தான போக்காகப் பார்க்க வேண்டியுள்ளது‌. ஆளுநர் மாளிகை இத்தகைய விவரங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எங்கிருந்து எழுகிறது?

மாநிலச் சட்ட மன்றத்திற்கான பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்து, தங்களுக்கான ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

வந்த வேகத்தில் திரும்பப் பெறப்பட்ட முந்தைய சுற்றறிக்கை.

மக்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்றம் இயற்றி அனுப்பும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் முரண்பட்டு, மோதல் போக்கு கடைப்பிடிபதன் மூலம், அரசை மக்கள் தேர்ந்தெடுத்தாலும்,  ஒன்றிய அமைச்சரவையின் பரிந்துரையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் நினைத்தால் மாநில சட்ட மன்றத்தைச் செல்லாக்காசு ஆக்கலாம் என்று தனது செயல்பாட்டின் மூலம் ஆளுநர் உணர்த்தி வருகிறார். தனது நடவடிக்கையின் மூலம் மக்களுக்கு மக்களாட்சி மீது உள்ள நம்பிக்கையை ஆளுநர் இழக்கச் செய்து கொண்டு இருக்கிறார்.

ஒரு புறம் மக்களாட்சி மாண்புகளை மதிக்காமல் நடப்பது, மற்றொரு புறம் வாக்களிப்பது மட்டுமே மக்களின் கடமை என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது என்ற போக்கைத் தமிழ்நாடு ஆளுநர் கடைப்பிடிக்கிறார்.

இத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும். வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளுங்கள். வாக்களிக்க உங்களைத் தகுதி படுத்திக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான சான்றுகளை உரிய வகையில், உரிய காலத்தில் பெற்றுப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதற்கும், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிப்பதற்கும் மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைச் சேகரிப்பது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பணியன்று.‌ இது வரம்பு மீறிய செயல்.

பல்கலைக்கழகங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத்  தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது. இத்தகைய செயலில் ஈடுபட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

அரசமைப்புச் சட்டம் தந்துள்ள அதிகார எல்லையைக் கடந்து ஆளுநர் மாளிகை அரசையும், பல்கலைக்கழங்களையும் இயக்குகிறதா? தமிழ்நாடு ஆளுநர் ஏன் இத்தகைய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்? என்பதைத் தமிழ்நாடு அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பல்கலைக் கழங்களின் துணை வேந்தர்களைத் தவறாக வழிநடத்துவது, அல்லது அச்சுறுத்துவது போன்ற செயல்களில்  ஆளுநர் மாளிகை ஈடுபடுவதாக இருந்தால், ஆளுநர் மாளிகையின் வரம்பு மீறுதலைத் தடுக்க சட்டரீதியான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.‌

தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்கள் தங்களின் கண்ணியத்தை இழக்காமல் செயல்படுவதற்குத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. ” என்ற வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்.

  • அங்குசம் செய்திப் பிரிவு.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.