ஹலோ… பேசுறது கேட்குதா..? ஹலோ… எதுவும் கேட்கலை..! துண்டிக்கப்பட்ட டவர்கள்!
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜவ்வாது மலை தொடரின் ஒரு பகுதியான புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு , நெல்லி வாசல் நாடு , ஊராட்சிகள் இருக்கின்றன. அவற்றில் சிறிதும், பெரிதுமாக 37 – க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் . இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று தகவல் தொடர்பு.
ஐந்து இடங்களில் பி.எஸ்.என்.எல் உள்பட 10 நெட்வொர்க் டவர்கள் . அண்ணாதுரை எம்பி உத்தரிவின் பேரில் நட்டுவச்சு சென்றார்கள் அதில் மூன்று தனியார் டவர்களை தவிர மற்ற டவர்கள் வேளை செய்வதில்லை பராமரிப்புமில்லை.
போதுமான அளவுக்கு செல்போன் டவர்கள் இல்லாததால், யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் செல்போன்களை தூக்கிக் கொண்டு டவர் கிடைக்கும் இடத்தைத் தேடி ஓடுகிறார்கள் மரத்தின் மீது ஏறி நிற்கிறார்கள், சில பகுதிகளில் நெட்வொர்க்கை தேடி கிலோமீட்டர் கணக்கில் பயணித்து பக்கத்து கிராமங்களுக்கே சென்று விடுகிறார்கள்.
இப்படியான சூழலில்தான், அவசரத்திற்குக் கூட தங்களால் போன் செய்ய முடியவில்லை . மாணவர்கள் இணையதள சேவையை பயண்படுத்த முடியவில்லையென இந்த கிராம மக்கள் பலமுறை சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் மாவட்ட ஆட்சியர், என மனு அளிக்காத ஆட்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு மனு அளித்து ஓய்ந்துள்ளனர்
இதுகுறித்து ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத்தின் செயலாளர் “ஜெயராமன்” அவர்களை சந்தித்து பேசினோம்
சமீபத்தில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் , புதூர் நாட்டில் பட்டா வழங்க வந்திருந்த மந்திரி வேலு . எம்பி அண்ணாதுரை ஆகியோரிடம் இதுகுறித்து முறையிட்டோம் , மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்திருந்தோம் நடவடிக்கை எடுப்பதாக சொன்தோடு சரி

சேர்கானூர் . ரங்க சமூத்திரம் , வடுதலம்பட்டு முழலை, கோம்பை உள்ளிட்ட . 5 கிராமங்களில் பிஎஸ்என்எல் டவர்களை நட்டுவச்சு ஒரு நாள் சோதனை ஓட்டத்தில் நின்றதோட சரி , பராமரிப்பு இல்லாமல் செயல் இழந்து போனது.
வடுதலம்பட்டு. தகரகுப்பம் , கிளானூர் . சேர்காணூர். முழலை . மேல்பட்டு . போன்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான டவர்கள் நடப்பட்ட புதியதில் அதிவேக சிக்னலும் இண்டர்நெட்டும் கிடைத்தது . கொரோனாவுக்கு பின்னாடி அந்த டவர்களில் வேகம் முற்றிலும் குறைக்கப்பட்டு கடமைக்காக காட்சியளிக்கிறது.
இன்று காலையில் உங்களை அழைப்பதற்காக வடுதலம்பட்டிலிருந்து அதோ அந்த உச்சி முகட்டில் உள்ள கிளானூர் வோடபோன் டவரின் அருகில் இருந்துதான் பேசினேன்
தகரகுப்பத்தில் உள்ள ஏர்டெல். கிளானூரில் வோடாபோன் , முழலை டவரில் ஏர்டெல் மற்றும் வோடபோன் தனியார் நிறுவனங்களின் டவர்கள் மட்டுமே ஓரளவிற்கு இயங்கி வருகிறது. அதுவும் 300 மீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே இவற்றிலிருந்து சிக்னல் கிடைக்கிறது.
நாங்களாவது பராவாயில்லை தம்பி , விலாங்குப்பத்தினர் 5 கிலோ மீட்டர் தாண்டி
கிளானூருக்கும் , ரங்கசமூத்திரம் மக்கள் 2 கிலோமீட்டர் தள்ளி தகரகுப்பம் டவர் இருக்குமிடத்திற்கும் . கோம்பை மக்கள் 4 கிலோமீட்டர் தாண்டி சென்று முழலை டவர் அருகிலும் வந்து பேசிவிட்டு செல்கின்றனர்
“வடுதலம்பட்டில் பிரசித்தி பெற்ற மாகா காளியம்மன் ஆலயம் உள்ளது” இங்கு மாதந்தோறும் நடக்கும் அமாவாசை ராத்திரி நடுஜாமம் பூஜையில் கலந்துக் கொள்வதற்காக . பாண்டிச்சேரி. கடலூர். வேலூர் . திருப்பத்தூர் திருவண்ணாமலை. மற்றும் பெங்களூர். ஆந்திரா மாநிலம் குப்பம் . சித்தூர் போன்ற பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொள்கின்ளனர் . அவர்கள் செல்போன் பேச படும் பாடு படுமோசம் என்றவர்
உங்கள் செய்திக்கு பிறகாவது கேட்கவேண்டியவர்களுக்கு கேட்டு நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்ப்போம் என்றார் , வடுதலம்பட்டு மகா காளியம்மனை கோவிலின் பின்புறத்தில் செயல் இழந்து கிடந்த BSNL டவரின் அருகிலுள்ள தண்ணீர் தொட்டி மீதும் . மர உச்சியின் கிளையிலும் அமர்ந்து சிலர் பேசிக்கொண்டு இருந்ததை நாம் பார்க்க முடிந்தது
புதூர் நாடு மக்களின் புகார் குறித்து அண்ணாதுரை எம்பி-யிடம் பேசினோம்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 98 புதிய செல்போன் டவர்கள் அமைக்க போராடி அனுமதி பெற்றேன். மேலும், போர்கால அடிப்படையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக . புதூர்நாடு உள்ளிட்ட ஜவ்வாது மலை கிராமங்களில் 33 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டது.

உங்களிடம் புகார் சொன்னவர்கள் என்னிடம் போனில் சொல்லி இருந்தாலே போதுமேஉடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பேன் . மாசத்தில் 7 நாட்கள் திருப்பத்தூர் அலுவலகத்தில் தான் இருக்கிறேன் ஒருவர்கூட இதுபற்றி புகார் அளிக்க வரவில்லை.
சில டவர்களுக்கு தொழிநுட்ப இயந்திரங்கள் பற்றாகுறை உள்ளது. கண்டிப்பாக தொலைதொடர்பு துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்து, நவீன டிஜிட்டல் உலகத்தில் பயணித்து வரும் நிலையில், இநத மலை கிராம மக்களுக்கு மட்டும் சாலை, மருத்துவம், சுகாதாரமான குடிநீர், தொலைதொடர்பு சேவை உள்ளிட்ட எந்த வசதிகளும் முறையாக கிடைக்காமல் தவித்து வருவது வருந்தத்தக்கதுதான்.
— மணிகண்டன்