பயணம் மகிழ்ச்சியாக இருக்கட்டும், மனதாலும் உடலாலும்!
ரயில் பயணங்களில் பலமுறை நம்மால் காணப்படுவது – சீட்டைப் பற்றிய தகராறு. கடந்த நாள் மல்பார் எக்ஸ்பிரஸில் நடந்த ஒரு சம்பவம் மனிதநேயம் மற்றும் சட்ட அறிவின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
பயணம் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து. ரிசர்வேஷன் காம்பார்ட்மென்ட்டில் கீழ் இருக்கை கிடைத்ததில் மகிழ்ச்சியுடன் ஒரு வயதான தாய் அமர்ந்து இருந்தார். மேலே உள்ள மிடில் சீட் ஒரு இளம் பெண்ணுக்கு. ரயில் காயங்குளத்தை கடந்திருந்தது, நேரம் சுமார் 9:20. மேலே இருக்கும் பெண்ணுக்கு உடனே படுக்க வேண்டும்!
கீழ் சீட்டில் அமர்திருந்த தாயிடம் மிடில் சீட்டை நிவர்த்துவேண்டுமென கூறி எழும்புமாறு அந்த இளம் பெண் கேட்டார். “எனக்கு கோட்டையிலே இறங்க வேண்டியுள்ளது, கொஞ்சம் நேரம் கூட உட்கார்ந்து கௌகிறேன்” என்றார் தாய். ஆனால் இளம் கேட்க தயாராக இல்லை. தனக்கு முதுகு வலி இருப்பதால் இப்பொழுதே படுக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். பயணியர்கள் பேசினாலும், அந்த பெண் கேட்கத் தயாராக இல்லை , இறுதியில் TTE வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இங்கே தான் ரயில்வே விதிமுறையின் முக்கியத்துவம் தெரிகிறது.
TTE அந்த இளம் பெண்ணிடம் சட்டத்தைத் தெளிவாக கூறினார்:
“இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை மட்டுமே மிடில் சீட்டில் படுக்க அனுமதிக்கப்படும்.
அதுவரை அந்த சீட்டை கீழே இறக்கிப் போட்டுவிட்டு உட்கார்ந்து தான் பயணம் செய்ய வேண்டும்.
அதையும் மீறி உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்தாலும், கீழே அமர்ந்தவர்களின் ஒப்புதல் இல்லாமல் மிடில் சீட்டை முன்கூட்டியே பயன்படுத்த முடியாது என்றும் TTE கூறினார். சட்டத்தை அறிந்ததும், தகராறு செய்தவர்கள் அமைதியாக இருந்தனர்.
இதிலிருந்து நம்மால் கற்றுக்கொள்ள வேண்டியது:
- ரயிலில் படுக்கை நேரம் இரவு 10 மணிமுதல் காலை 6 மணி வரை.
சட்டத்திற்கும் மேலாக, பயணியர்களிடம், குறிப்பாக வயதானவர்களிடம் மரியாதை மற்றும் மனிதநேயம் காட்டுவதை மறக்கக்கூடாது. டிக்கெட் வாங்கினால் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.