அங்குசம் சேனலில் இணைய

பஞ்சப்பூர் மார்க்கெட் யாருக்கு ? அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் மேயர் ! தீர்மானம் போட்ட காந்தி மார்க்கெட் வியாபாரிகள் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்யமாட்டோம் என்பதாக எங்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பஞ்சப்பூரில் யாருக்காக காய்-கனி வளாகத்தை கட்டுகிறீர்கள்? என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி வருவதாக, மாநகராட்சி மேயருக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஆகஸ்டு 20 அன்று திருச்சி வலிமா மினி ஹாலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்தான் இந்த பரபர தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதின் தலைமையில், அவைத்தலைவர்கள் யு.எஸ்.கருப்பையா, ஜி.பி.எம். ஆகியோர் முன்னிலை வகிக்க, கூட்டமைப்பின் ஆலோசகர்கள் ஏ.எம்.பி. அப்துல் ஹக்கீம், ஏ.தங்கராஜ், எஸ்.பி.பாபு, ஒருங்கிணைப்பாளர்கள் வி.என். கண்ணதாசன், எஸ்.எம்.டி. ஷமி முகம்மது, துணைத்தலைவர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டமைப்பின் செயலர் என்.டி.கந்தன் நன்றியுரையோடு கூட்டம் நிறைவு பெற்றது.

பஞ்சப்பூர் மார்க்கெட் யாருக்குஇந்த ஆலோசனை கூட்டத்தில், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகளின் முக்கியமான கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விவாதத்தை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

முக்கியமாக, பல்லாண்டு காலமாக பாரம்பரியமான இடமாகவே கருதப்பட்டு வரும் திருச்சி காந்திமார்க்கெட் பழமை மாறாமல் பழையபடியே இங்கேயே தொடர வேண்டும் என்பதுதான் கூட்டமைப்பின் விருப்பமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையில் கூட்டமைப்பு உறுதியாக நிற்கிறது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சட்டசபையில் திருச்சி காந்தி மார்க்கெட் விவகாரம் குறித்தும் பேசியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த நகர்ப்புற அமைச்சர் கே.என்.நேரு ரூபாய் 50 கோடி செலவில் திருச்சி காந்தி மார்க்கெட் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்பதாகவும் சட்டசபையில் அறிவித்திருந்தார். கூட்டமைப்பின் வியாபாரிகளுக்கு அப்படி ஒரு உறுதிமொழியை அரசின் சார்பில் அதுவும் சட்டசபையிலேயே, வழங்கிவிட்டு அதனை மீறுகிற வகையில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பேசி வருவதாக கூட்டமைப்பின் சார்பில் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்கள். காந்திமார்க்கெட் இடையூறாக இருக்கிறது என்றும் இடம் மாற்றம் செய்யப்படும் என்றும் அடிக்கடி பத்திரிகையில் பேட்டி கொடுத்து வரும் மேயரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

வியாபாரிகளின் எங்களின் மூலம் ஆண்டுக்கு வரி மூலமும், வாடகை மூலமும் பலகோடி ரூபாய்களை வருமானம் ஈட்டி அதன்மூலம் நிர்வாகம் நடத்திவரும் மாநகராட்சி தொடர்ந்து தங்களையும் பொதுமக்களையும் பீதிக்குள்ளாக்கி வருவதோடு கொடுத்த வாக்குறுதியை மீறுவதன் மூலம் வியாபாரிகள்மத்தியில் அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவருவதையும் கண்டித்திருக்கிறார்கள்.

பஞ்சப்பூர் மார்க்கெட் யாருக்குகடந்த ஆக-04 அன்று திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 இல் உதவி ஆணையர் தலைமையில், கூட்டமைப்பினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஆடி-28 முடிந்து மறுநாளே சுமார் 3 கோடியே 65 இலட்சம் செலவில் காந்தி மார்க்கெட் முழுவதும் சாலைகள் புதுப்பித்தல் சாக்கடைகள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால், சொன்ன வாக்குறுதியின்படி, இதுநாள் வரையில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்படாததையும் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

காந்திமார்க்கெட் இடமாற்றம் விவகாரம் தொடர்பான் சர்ச்சை குறித்து, குறிப்பாக காந்திமார்க்கெட் இடம் மாற்றம் செய்யபடாது என்பதாக எங்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு பஞ்சப்பூரில் புதிய காய்கனி வளாகம் யாருக்காக கட்டப்படுகிது என்பது குறித்து விளக்கம் பெறுவதற்காகவும் மாவட்டத்தின் அமைச்சர், ஆட்சியர், ஆணையர் ஆகியோரை கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேரில் சந்திப்பது என்பதாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

 

—   ரூபன்ஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.