சீட் கேட்டது குத்தமாய்யா… திருச்சி காங்கிரஸ் திகு… திகு… ! வீடியோ
சீட் கேட்டது குத்தமாய்யா… திருச்சி காங்கிரஸ் திகு… திகு…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டுமென்று, லோக்கல் காங்கிரசார் சார்பில் அகில இந்திய தலைமைக்கு வேண்டுகோள் விடுத்ததற்காக, தனது கட்சிப் பதவியை பறித்துவிட்டார்கள் என புகார் வாசிக்கிறார், புத்தூர் சார்லஸ்.
”காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறையின் திருச்சி மாவட்ட மாநகர் தலைவராக சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டேன். பாரம்பரியமான காங்கிரசு குடும்பத்தைச் சேர்ந்த வன். எவ்வளவு இன்னல் வந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாரம்பரியமான காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற கொள்கை பிடிப்போடு, சிறுவயது முதலாகவே காங்கிரசு கட்சிக்காக அர்ப்பணித்து வாழ்ந்து வருபவன் நான்.
வீடியோ லிங்
திருச்சியின் அடையாளங்களுள் ஒன்று முன்னாள் எம்.பி. அண்ணன் எல்.அடைக்கலராஜ். தொடர்ந்து நான்குமுறை எம்.பி.யாக இருந்து திருச்சிக்கு பல்வேறு நல்லது செய்திருக்கிறார். அவரது மகன் ஜோசப் லூயிஸ் அவர்களும் கட்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருப்பதோடு, கட்சி பணியும் ஆற்றி வருகிறார். சென்ற முறையும் எம்.பி. சீட்டுக்காக முயற்சி செய்தார்.
கடைசி நேரத்தில் கிடைக்காமல் போனது. இந்தமுறை, ஜோசப் லூயிஸ்க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எங்களது எண்ணத்தை அகில இந்திய தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, எனது தலைமையில் திருச்சி அஞ்சலகத்திலிருந்து அகில இந்திய தலைமைக்கு இ-அஞ்சல் முறையில் கடிதம் அனுப்பினோம்.
இது ஜனநாயக நாடு. கட்சியிலும் எம்.பி. தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்து யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்யலாம். அதுபோலதானே, தொண்டர்கள் நாங்கள் எங்கள் விருப்பத்தை தெரிவித்தோம். அதுவும் அஞ்சல் அனுப்பியது குற்றமா?
இதற்காக, எங்களது மாநிலத்தலைமைக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்து, “எனக்கு எதிரா வேலை செய்ற அந்த ஆள முதல்ல பொறுப்புல இருந்து தூக்கு”னு சொல்லி எனது பதவியை பறித்துவிட்டார், சிட்டிங் எம்.பி. திருநாவுக்கரசு.” என வெடிக்கிறார், சார்லஸ்.மேலும், “கட்சி யாரை வேட்பாளரா நிறுத்தினாலும், அவருக்காக வேலை செய்றது எங்க கடமை. அத மறுக்கல. ஆனால், இப்போ இருக்கிற எம்.பி.திருநாவுக்கரசு மேல மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்குது. எம்.பி.ய காணோம்னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு போச்சு. அதனால இவரையே திரும்ப நிறுத்தினா ஜெயிக்கிறது கடினம். அதனால, இவருக்கு வாய்ப்பு கொடுங்கனு கேட்கிறது தப்பு ஒன்னும் இல்லையே?” என கேள்வி எழுப்புகிறார், அவர்.
இந்த விவகாரம் குறித்து கருத்தறிய எம்.பி. திருநாவுக்கரசு அவர்களிடம் அங்குசம் சார்பில் பேசினோம். விசயத்தைக் கேட்டுக் கொண்டவர், “உங்களையும் யார் என்று தெரியாது. அவரையும் யார் என்று தெரியாது. நான் திருச்சிக்கு வரும்பொழுது நேரில் சந்தியுங்கள்.” என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார் .
– ஆதிரன்
இதையும் படியுங்கள்…
இதையும் படிங்கள்…
”அவனை நான் செருப்பால அடிப்பேன்” …. ’’சீமானாக” – மாறத்துடிக்கும் பழுத்த அரசியல்வாதி திருநாவுக்கரசர் !
வீடியோ லிங்
Thirunanukarasu waste …..Don’t vote him