அமைச்சர்களுக்கு தலைமை கொடுத்த அட்வைஸ் – அமைச்சர் உடன்பிறப்புக்கு கொடுத்த அட்வைஸ் – திருச்சி அரசியல் !
கே என் நேரு அமைச்சராக பொறுப்பேற்றது முதலே துறை ரீதியான நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டு வருகிறார். இதன் காரணமாகத்தான் தற்போது தலைமைச் செயலாளர் வெளியீட்டு இருக்கக்கூடிய சுகாதாரத்தில் முன்னேறிய மாவட்டங்களில் பட்டியலில் திருச்சி மிக முக்கிய இடத்தில் உள்ளதாம். இப்படி நேரு கட்சியிலும், தனது துறையிலும் தன்னுடைய திறமையை காட்டிட்டு வராரு என்று அறிவாலயத்தில் பேசப்படும் அதேவேளையில் சில விஷயங்கள் கே என் நேருவுக்கும், மகேஷ் பொய்யாமொழிக்கும் கட்சியின் தலைமையிடம் கெட்ட பெயர் உண்டாகி இருக்கிறதாம்.
இப்படி இளம் அமைச்சருக்கும், மூத்த அமைச்சருக்கும் இடையே உள்ள பனிப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக இரண்டு தரப்பினருமே கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி எதிர் தரப்பினரை விட நாங்கள் தான் பெரிய ஆள் என்று காட்டி வருகிறார்களாம்.
இப்படி இரண்டு அமைச்சர்களுடைய ஆதரவாளர்களும் தனித்தனியே தங்களுடைய ஆளுமையை காட்டி வருவது கட்சிக்கு வளர்ச்சியா வீழ்ச்சியா என்று சிந்திக்கத் தொடங்கி இருக்கிறதாம் சென்னை அறிவாலய வட்டாரம். மேலும் திருச்சியில் நடக்க கூடிய அனைத்து விஷயங்களுமே முதல்வருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறதாம்.
இந்த நிலையில் ஒருவர் சீனியர் கட்சியின் தவிர்க்க முடியாதவர், இன்னொருவர் ஜூனியர் கட்சிக்கு முக்கியமானவர் இதனால் முதல்வர் இரண்டு பேர் விஷயத்திலும் பெரிய அளவில் தலையிடுவது இல்லையாம்.
ஆனாலும் அதே சமயம் அவ்வப்போது இரண்டு பேரையும் அழைத்து தனித்தனியே அறிவுரை கூறுவது அரங்கேறுகிறதாம்.
இப்படி அறிவுரையை பெற்ற மூத்த அமைச்சர் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து “யோவ் உங்களால தான் எனக்கு கெட்ட பேரு வருது, நமக்கு என்ன வேலையோ அத கரெக்டா செய்தாலே போதும், அதை விட்டுட்டு மற்றவங்களை பார்த்துகிட்டே இருந்தா நம்ப அதே இடத்தில் தான் இருப்போம் போய் ஒழுங்கா அவங்கவங்க வேலைய பாருங்க” என்று கூறினாராம்.