அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி – திமுக வேட்பாளர்களை ஆதரித்து மல்லை சத்யா பிரச்சாரம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

மதிமுகவிலிருந்து விலகி, திராவிட வெற்றிக் கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கிய மல்லை சி.சத்யா, தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறார். இந்நிலையில், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும், மல்லை சத்யா எதிர்வரும் ஏப்-14 அன்று திருச்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அவருடன், திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர், கருஞ்சட்டை கருத்தியல் பாசறையின் மாநில தலைவர் மிசா சாக்ரடீஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் எமக்குட்டி உட்பட திராவிட வெற்றிக் கழகத்தின் முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பிரச்சார சுற்றுப்பயண விவரம் குறித்த தகவலை, திராவிட வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் எமக்குட்டி அறிவித்திருக்கிறார்.
காலை 7.00 மணி : அம்பேத்கர் சிலைக்கு (அரிஸ்டோ அருகில்) மாலை அணிவித்தல்.
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து பிரச்சாரம்.
காலை 8.00 மணி : எடமலைப்பட்டி புதூர் கடைவீதி
காலை 9.00 மணி : பீமநகர் திடல் மாரியம்மன் கோவில்
திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யமொழியை ஆதரித்து பிரச்சாரம்.
மாலை 4.30 மணி : காட்டூர் பேருந்து நிலையம்.
மாலை 5.30 மணி : திருவெறும்பூர் பேருந்து நிலையம்.
மாலை 6.30 மணி : பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ்-ஐ ஆதரித்து பிரச்சாரம்.
இரவு 7.30 மணி : சுப்பிரமணியபுரம் கடைவீதி.
இரவு 8.15 மணி : காஜாப்பேட்டை.
என்பதாக, தெரிவித்திருக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.