அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி NITT – யில் ”ஃபெஸ்ட்ம்பர்” (FESTEMBER) சர்வதேச கலைத் திருவிழா !

மாணவர்களால் நடத்தப்படும் கலைத் திருவிழா

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில், (NITT – National Institute of Technology, Tiruchirappalli) 2025- ஆம் ஆண்டுக்கான கலாச்சார விழாவை ”ஃபெஸ்ட்ம்பர்” (FESTEMBER) என்ற தலைப்பில் கொண்டாடவிருக்கிறார்கள்.

1964 ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவில் உள்ள சிறந்த தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் NITT உலகளவிலும் கவனத்தை பெற்ற கல்வி நிறுவனமாக திகழ்கிறது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

1975 – ஆம் ஆண்டு முதலாக, மாணவர்களால் நடத்தப்படும் கலைத் திருவிழாக்கள், மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணறும் விழாக்களாக மட்டுமின்றி, நினைவை விட்டு அகலாத புதுமையின் படைப்பாக, துடிப்பான கொண்டாட்டமாகவே இதுவரையிலும் இருந்து வந்திருக்கிறது.

NIT Trichy Admissions 2025: Dates, Application Process, Eligibility & Selection, Cutoff, Placementsவெற்றிகரமாக கால்நூற்றாண்டு காலம், கலைத்திருவிழாவை நடத்திய பாரம்பரிய பெருமையுடன், 2025 – ஆம் ஆண்டுக்கான கலைத்திருவிழா கொண்டாட்டத்தை செப்டம்பர் 18 முதல் 21  வரை “ரகசியங்களின் கதை” என்ற கருப்பொருளில் நடத்தவிருக்கிறார்கள்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

500-க்கும் அதிகமான வெவ்வேறு கல்லூரிகளிலிருந்தும் சுமார் 18,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபெறும் இந்த திருவிழா, திறமையை வெளிப்படுத்தும் மேடையாக மட்டுமின்றி, நண்பர்களுடனான பொன்னான சந்திப்பிற்கான சாளரமாகவும் அமைந்திருக்கிறது.

NITT – யில் ”ஃபெஸ்ட்ம்பர்” (FESTEMBER) சர்வதேச கலைத் திருவிழா பிரபலங்களால் பொங்கி வழியும் வழக்கம் போலவே, இந்த ஆண்டும் சித் ஸ்ரீராம், ஜொன்டி ரோட்ஸ், சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிய பெரும் புகழ்பெற்ற நபர்கள் பங்கேற்று விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள். ரசிகர்களின் பிரியமான ஃபேஷன் ஷோ, வாள்சண்டை முதல் விதவிதமான குதூகலம் ததும்பும் 55 வகையான விளையாட்டுகளும் பல்சுவை நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

மீனா கந்தசாமி, மாரி செல்வராஜ், ஹிப்ஹாப் தமிழா, கௌரி கிஷன், ஜாண்டி ரூட்ஸ், துருவ் விக்ரம் ஆகியோரின் வாழ்க்கை அனுபவ மொழிகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இத்திருவிழா தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அக்ஷய் (91 99406 64664) தேவாதியா (+91 98403 64237) ஈஷ்வர் (+91 99404 34243) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

  —   அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.