மலைக்கோட்டை மகுடம் யாருக்கு…? துரைவைகோ vs கருப்பையா

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மலைக்கோட்டை மகுடம் யாருக்கு…? துரைவைகோ vs கருப்பையா – மலைக்கோட்டையை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழக அரசியலை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. கடைசி நேர கள நிலவரத்தை பார்ப்போம்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி, திருச்சி- புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம்,திருவெறும்பூர், கந்தர்வகோட்டை,புதுக்கோட்டை உள்ளிட்ட
சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி எம்.எல்.ஏக்களே உள்ளனர்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

திருச்சி தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 44 ஆயிரத்து 742. அதில்  38 ஆயிரத்து 595 பெண் வாக்காளர்கள் கூடுதல்.

இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ்,அ.ம.மு.க சார்பில் செந்தில்நாதன், அ.தி.மு.க சார்பில் கருப்பையா, ம.தி.மு.க சார்பில் துரை.வைகோ ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

திருச்சி நாடாளுமன்ற தொகுதில்  ஒரு முறை தி.மு.கவும்,  3 முறை அ.தி.மு.க, 1 முறை ம.தி.மு.க , காங்கிரஸ் 4 முறையும், சி.பி.ஐ 2 முறையும் மற்றும் பா.ஜ.க ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

பழைய திருச்சி தொகுதியில் உள்ள சமூக பெரும்பான்மையை கருத்தில் கொள்வதில்லை. அப்படிதான் அடைக்கலராஜ், தலித் எழில்மலை, ரங்கராஜன் குமாரமங்கலம், எல்.கணேசன் ஆகியோர் வெற்றி பெற்று   பெருமை சேர்த்த தொகுதி திருச்சி.

இந்த முறை திருச்சி தொகுதியில் முதன்முதலில் வேட்பாளராக பணிகளை துவக்கியவர் ராஜேஷ்.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள், மற்றும் அவரது சமூகம் சார்ந்த
வாக்குகளை கணிசமாக பெற்றுவிட ஓடி ஆடி வருகிறார்.
சில இடங்களில் குதிரையிலும், ஜல்லிக்கட்டு காளைகளோடும் வாக்கு சேரிக்கிறார்.

அ.ம.மு.க செந்தில்நாதன் அவர் வகித்த திருச்சி மாநகர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களமாடி வருகிறார். கடந்த தேர்தலில் சாருபாலா தொண்டைமான் பெற்ற 1லட்சத்து 818  வாக்குகளையாவது பெற்றுவிட வேண்டும் என தீவிரமாக வேலை செய்கிறார். காய்கறி விற்பது போன்றும் வாக்கு சேகரித்தும், அவரது “வைரல்” பேட்டிகள் பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதிமுக வேட்பாளரான கருப்பையா, பிரச்சாரத்தில் அனல் பறக்குகிறது. அவர் ஆதரவாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், ஆகியோர் தீவிரமாக வேலை செய்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கூடவே கருப்பையா தாராளமாக செலவு செய்வதால் கடந்த தேர்தல்களில் சீனிவாசனும், ப.குமார், மனோகரன் ஆகியோர் செய்த களப்பணி அனுபவமும், டாக்டர்.விஜயபாஸ்கரின் வியூகங்களும் கை கொடுக்கும் என வலம் வருகிறார். கூடவே திருச்சியில் பல்வேறு பகுதிகளில் கருப்பையாவின் தாராள குணத்தால் அதிமுகவினர் தங்கள் பகுதிகளில் வேட்பாளரை தேடாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது காண முடிகிறது.

பிரச்சாரத்தை பொறுத்தவரை அ.தி.மு.க கருப்பையா தொகுதியில் ஓடி ஓடி செய்யும் பிரச்சாரத்துக்கு திமுக கூட்டணி வேட்பாளர் துரை.வைகோ பின்னோக்கி உள்ளார் என தெரிகிறது.

அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதால், அவரது ஆதரவாளர்கள் முழுக்க பெரம்பலூர் தொகுதியில்  உள்ளனர். இடையில் அவ்வப்போது துரை.வைகோவுக்காக அமைச்சர் கே.என்நேரு தலைகாட்டி வருவதும், திருச்சியின் மற்றொரு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர் தொகுதிக்கு பொறுப்பாளராக இருப்பதால் அங்கு அதிகம் இருக்க வேண்டிய சூழல். இதனால் துரை.வைகோ பல இடங்களில் தன்னந்தனியாக பிரச்சாரத்தில் ஓடியாடி வருகிறார்.  கடைசி நேர தி.மு.க வேலைகள் கை கொடுக்கும் என மதிமுக பலமாக நம்புகிறது.

கருப்பையாவோ, துரை வைகோ புதியவர், வெளியூர் காரர், தனக்கு இந்த மண்ணைப் பற்றியும் நமது மண்ணின் பிரச்னை பற்றியும் தனக்கே முழுவதாக தெரியும். மக்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு தன்னால் தீர்க்க முடியும் என பேசி மக்களை கவர் செய்கிறார்..

மேலும்,கருப்பையா குடும்பத்தின் மணல் பிஸ்னஸ், ரவி என்பவரின் கொலை வழக்கில் குற்றவாளியாக  இருப்பது அவருக்கு எதிராக உள்ளது. ஆனாலும்  கருப்பையாவோ, தனது தடாலடி பாணியில் யார் மீது வழக்கு இல்லை என கூழாக பதில் செல்கிறார்.

திருநாவுக்கரசர் கடந்த முறை 6 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும் மக்களின் நம்பிக்கையை பெறவில்லை என்பதும்,
துரைவைகோ வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அழுகையோடு பேசிய பேச்சும், அவர் விடாபிடியாக தனிச்சின்னமான தீப்பெட்டியில் நிற்பதும் திமுகவினரை சலிப்படைய வைத்திருப்பதும் மைனஸாக உள்ளது.

ஆனாலும் துரைவைகோவின் ஏரி வேலை பேச்சு பெண்களையும், பொதுமக்களையம் கவரும் வகையில் உள்ளது. மேலும்,டிராக்டரில் பிரச்சாரம், ஸ்ரீரங்கம் வைணவ  தளத்தை மேம்படுத்துவேன் என திருச்சி பஞ்ச் பேட்டிகள் மக்களை ஈர்த்துள்ளது.

ஆனாலும், கருப்பையாவின் “ப” பாய்ச்சலுக்கு  ஈடு கொடுக்க முடியாமல் துரை வைகோ தடுமாறுவது தெரிகிறது..

உடன்பிறப்புக்கள் மனம் மாறி, திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுபடி
கடைசி நேர களப்பணியில் தீவிரம் காட்டினால் மட்டுமே மலைக்கோட்டையில் மகுடம் சூடுவதோடு தனது தந்தை வைகோவுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் கர்ஜிப்பார் என்பதே நிதர்சனம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.