திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி அவர்களின் தலைமையில் செயல்படும் திருச்சி மாநகர காவல்துறை சிறப்பாக கையாண்டு வருகிறது.

கமிஷனர் காமினி
கமிஷனர் காமினி

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மேலும் திருச்சி மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து காவலருக்கு உற்ற தோழனாக இருப்பது என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் தான். திருச்சி மாநகரில் சில நேரங்களில் ஏற்படும் மின்தடையால் இந்த சிக்னல்கள் இயங்க முடியாமல் போவதால், போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து காவலர்கள் பாடாய்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளும் செய்வதரியாது வாகனத்தை இயக்குவதால் வித்து ஏற்படுகிறது. இதுவே பள்ளி தொடங்கிவிட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படவாய்ப்புள்ளது.

திருச்சி சிக்னல்
திருச்சி சிக்னல்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மேலும் திருச்சி மாநகரில் மொத்தமாக மாம்பழச்சாலை சிக்னலில் தொடங்கி, காவிரி பால சிக்னல், தெப்பக்குள சிக்னல், பால்பண்ணை, தலைமை தபால் நிலையம், கோர்ட், புத்தூர் நான்கு ரோடு, கோஹினூர், அறிவாலயம் சிக்னல்  என மொத்தம் பத்திற்கு உட்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் தான் உள்ளன.

எனவே திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக திருச்சி மாநகரில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களை மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டாலும் இயங்கும் வகையில் மாற்றியமைத்து தரம் உயர்த்த வேண்டுமாய் மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.

 

வக்கீல்.S.R.கிஷோர்குமார், மாவட்ட செயலாளர்,

மக்கள் நீதி மய்யம் கட்சி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.