அங்குசம் சேனலில் இணைய

இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கரூர் சம்பவம் தொடர்பாக இன்றைய தினமணி தலையங்கம் மிகச் சிறப்பாக உள்ளது..

இதோ பதிவு..

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்த பதிவை எழுதியிருக்கும்  Guna Seelan K  தீவிரமான திமுக எதிர்ப்பாளர். நடந்த உண்மையை சரியாக எழுதிருக்கிறார்.

இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை. இதை செய்தது வேறு யாருமல்ல.  TVK தலைவரும்,  கட்டுப்பாடற்ற தொண்டர்களும்தான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பள்ளிக்குழந்தைகளுக்கு விடுமுறை நாள் பார்த்து கூட்டம் நடத்திய ஜோசப் விஜய்தான் இதில் முதல் குற்றவாளி. கூட்டத்தில் நாற்பது வயதைக்கடந்தவர்கள் அதிகபட்சம் ஆயிரம்பேர்கூட இல்லை. எல்லாமே  உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி , கல்லூரி மாணவர்கள்தான்.

கரூர் மாநாடுஇரண்டு நாள் முன் அதே இடத்தில் அதிமுக கட்சியின் மாபெரும் கூட்டம் நடந்தது. யாருக்கும் ஒரு சிராய்ப்புக்கூட இல்லை. கூட்டம் நடந்த இடத்திலிருந்து  என் வீடு நாற்றூற்று ஐம்பது மீட்டர்தான். இரண்டு கூட்டங்களையும் நான் ஒப்பீடு செய்து பார்த்தேன். இரண்டாவது நடந்த விஜய் கூட்டத்தில் நடக்கப்போகும் முடிவுகளை   மதியம் 12 மணிக்கே கணித்துவிட்டேன். ஏனெனில் விஜய் வருவதாக முதலில் சொல்லியிருந்த நேரம்  மதியம் 12 மணி.   காலை 8.45க்கு நாமக்கல் வருவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் விஜய்  காலை 8.45 க்கு சென்னையில் இருந்திருக்கிறார்.   நாமக்கல்லிலும் இதே மாதிரி தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்திற்கு வந்தவர்கள் பாதிப்பேர் கூட்டம் நடந்த இடத்திலேயே செருப்பையும் கொடியையும் விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

கூட்டம் முடிந்தபின் நாமக்கல்லில் கூட்டம் நடந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்ததை தொலைகாட்சியில் பார்த்தபோதே இன்று கரூரில் சம்பவம் இருக்கு என முடிவு செய்தேன். மதியம் 12 மணிக்கெல்லாம் கரூர் வேலுச்சாமிபுரம் சாலையில் கூட்ட நெரிசல் ஆரம்பித்துவிட்டது.   இளைஞர்கள்  பைக்கில் வீலிங் செய்துகொண்டு படுபயங்கர ஆட்டம்போட்டுக்கொண்டு சாலைகளில் அலைந்தார்கள்.  முனியப்பன் கோவில் அருகே  ஒருவன் பைக் ஓட்ட பின்னால் இருந்த இருவர் ஆளுக்கொரு பக்கம் சாய்ந்துகொண்டு பீர் குடித்துக்கொண்டு அலப்பரை செய்ததை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவைல்லை.

Tragedy as 40 people died in a stampede at Karur campaign rally.. Is there a chance to arrest Vijay? | கரூர் பிரசார கூட்ட நெரிசல் சிக்கி 39 பேர் பலியான சோகம்.. விஜய்யை கைது செய்ய வாய்ப்பு?அடுத்த சில நொடிகளில் வண்டியோடு விழுந்து சிராய்ப்புகளோடு எழுந்துசென்ற இளைஞர்களை விரட்டிக்கொண்டு ஓடியது போலீஸ்.  கிட்டத்தட்ட மதியம் இரண்டு மணிக்கெல்லாம் கூட்டத்தில் இருந்த குழந்தைகள் , பெண்கள் அனைவருமே சோர்ந்துபோய்விட்டார்கள். அப்போதே சிலர் மயங்கிவிழ ஆரம்பித்துவிட்டார்கள். TVK கட்சியை சேர்ந்த இளைஞர்கள்   ஆம்புலன்ஸ்  சைரன்களை அலரவிட்டபடி வண்டியில் தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு வந்தபோதுதான் முதல் சம்பவம் அரங்கேரியது.  அவை அனைத்தும் காலையில் இருந்தே TVK கொடி மற்றும் பேனருடன் சுற்றிக்கொண்டிருந்த ஆம்புலன்ஸ்கள்.

12 மணிக்கு வருவதாகச்சொல்லியிந்த விஜய் நான்குமணி ஆகியும் வரவில்லை. கூட்டம் கலையமுற்பட்டபோதுதான் அடுத்த விபரீதம் ஆரம்பித்தது. சாலையில் ஓரங்களில் ஆங்காங்கே இருந்த பக்கத்தெரு வழிகளை எல்லாம் தொண்டர்கள் அடைத்துவிட்டார்கள். கூட்டம் நடக்கும் இடத்திலிருந்து யாருமே தப்பிச்செல்ல வழியில்லாமல் போனது. இன்னிலையில் மேலும் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்போதே பரவலாக மயங்கிவிழ ஆரம்பித்துவிட்டார்கள்.

கரூர் சம்பவம் | Karur incident:விஜய் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோதே குழந்தைகள் உள்ளிட்ட சிலர் இறந்துவிட்டார்கள்.   ஒன்பது வயது சிறுமியை கானவில்லையாம் கண்டுபிடித்துக்கொண்டுங்கள் என்று விஜய் மைக்கில் பேசியபோது அங்கே நெரிசல் இன்னும் அதிகமாகியது.  அந்த நேரத்தில்தான் இந்த விபரீதம் நடந்தது. ஆங்கே சாலை ஓரத்தில் வைத்திருந்த ஜெனரேட்டர்களுக்கான தகரத்தடுப்புகளின் மீது ஏறியது  ஒரு தற்குறிக் கூட்டம்.  சுமார் 12 அடி உயரம் கொண்ட அந்த தகர தடுப்புகள்  அப்படியே கூட்டத்தின் பக்கம் சரிந்தது. கூட்டம் அப்படியே சிதறியது.  அப்போதுதான் மின்சாரம் போய்விட்டது. பிறகுதான் அங்கு இந்த கொடிய மரணங்கள் நிகழ்ந்தது. இவ்வளவு மோசமான அரசியல் புரிதலற்ற சமூக கட்டுப்பாடுகளற்ற இந்தக்கட்சி  உடனடியாக தடைசெய்யப்படவேண்டிய கட்சியாகும்.

அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத இப்படிப்பட்ட மூடர்களால் தமிழகம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.  இனி இப்படி ஒரு சம்பவம் எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும். எல்லாவற்றையும்விட இத்தனை கொடூரங்கள் நடந்தும் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்னைக்கு ஓடிய  ஈவிரகமற்ற அந்தக்கோழையை நம்பி பல்லாயிரக்கணக்கான  இளைஞர்கள்    தனது எதிர்காலத்தை பலிகொடுத்துவிடாமல் இனியாவது திருந்த வேண்டும். சிகிச்சையில் இருப்பவர்கள் நலமுடன் வர பிரார்த்தனைகள்.

 

—     K. குணசீலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.