உதயநிதி துணைமுதல்வர் ஆனதால் தமிழகத்தில் பாலாறும் தேனாறுமா ஓடப்போகிறது- எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தடாலடி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் MLA-வும் மான ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரை கிழக்கு வடக்கு, தெற்கு ஒன்றிய கழக வளர்ச்சிப் பணிகள் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இதை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் MLA ராஜன் செல்லப்பா பேசுகையில்.

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது.? உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே முதலமைச்சர் அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தார். தற்போது அதிகாரபூர்வமாக துணை முதலமைச்சர் என அறிவிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் திமுக, அதிமுக என இரண்டே கட்சிகள் இருந்தன, தற்போது தமிழகத்தில் பல கட்சிகள் வந்துள்ளன, புதிதாக கட்சிகள் வந்ததால் சில வாக்குகள் சிதறியுள்ளன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

MLA ராஜன் செல்லப்பா

அதிமுகவின் 10 சதவீத வாக்குகள் குறையவில்லை, அதிமுக, திமுக தவிர பிற கட்சிகள் சிறிய கட்சிகள் தான், எங்களின் தோலில் ஏறி சவரி செய்யும் கட்சிகளாக தான் பார்க்கிறோம் என்றார். எடப்பாடி பழனிச்சாமி ராஜதந்திரத்தோடு அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றியடையும், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இனி சோதனையுமில்லை, இடையூறுகளுமில்லை, சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவது எனும் ஒரே நோக்கில் அதிமுக பணியை தொடங்கி உள்ளது.

திமுகவை பலமுறை வீழ்த்தியுள்ளோம், சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவது கடினமல்ல, அதிமுக ஒரு பீனிக்ஸ் பறவை தோல்விகளை கடந்து வெற்றியை ஈட்டும், திருமாவளவன் இந்தியாவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அவரின் கோரிக்கை நிறைவேறாது, அதிமுக ஆட்சிக்காலத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டன, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நோக்கில் தான் அதிமுக உள்ளது” என கூறினார்.

 

— ஷாகுல். படங்கள் : ஆனந்தன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.