அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பல்கலைகழகங்களின் உரிமைகளும் மாண்புகளும் காக்கப்பட வேண்டும் – கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கோரிக்கை.

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் தலைமையில் (16. 04. 2025) நடக்கும் பல்கலைக்கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம். இந்த கூட்டம் அரசின் புகழ் பாடும் கூட்டம் அல்ல.

அரசுப் பல்கலைக்கழகங்களைக் காத்திட முக்கிய விவாதங்களை நடத்த கூட்டப்பட்டுள்ள‌ கூட்டமாக‌ இதில் பங்கேற்கும் அனைவரும் கருதிட வேண்டும் என்று இம்மாநில மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.‌

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

11.04. 2025 அன்று சென்னைப் பல்கலைக் கழக சின்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பல்கலைக்கழகத்தின் தற்கொலைக்கே வழிவகுக்கும். அந்த கூட்ட முடிவுகள் திரும்பப் பெற வேண்டும். அத்தகைய முடிவுகள் இனி வருங்காலத்தில் எந்த பல்கலைக்கழகக் கூட்டங்களிலும் எடுக்கக் கூடாது.

2014 முதல் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு தனது நிதிப் பங்களிப்பை படிப்படியாக குறைத்து, தற்சமயம் பல்கலைக் கழகங்களுக்கு நிதி உதவி இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மாநில அரசின் நிதித் துறை Local Fund Audit தணிக்கை முறை மூலம் பல்வேறு ஆட்சேபனைகளை எழுப்பி மாநில‌ அரசின் நிதியைக் குறைக்கத் தொடங்கியது.

தற்சமயம் சுயநிதிப் பாடப் பிரிவுகள் (Self Supportted Course) அதிகரித்து, வசதி இல்லாதவர்களுக்கு உயர் கல்வி இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. உயர் ஆராய்ச்சிகள் முடங்கி உள்ளது.

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

துணைவேந்தர் தொடங்கி பெரும் பகுதி‌ பணி இடங்கள் காலியாக‌ உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு ஆசிரியர் தொடங்கி அனைத்து நிலையிலும் பணிகள் நடைபெறுகிறது.

இதனால் கற்றல் மற்றும் ஆய்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.‌ உழைப்புச் சுரண்டலில் பல்கலைக்கழகங்களே ஈடுபடுவது மிகுந்த வேதனை.

Local Fund Audit உருவாக்கி உள்ள சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து, பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி நிலை பாதிக்காமல் தனி தணிக்கை நடைமுறையை உருவாக்க வேண்டும்.

துணை வேந்தர் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே புதிய துணை வேந்தர் தேடுதல் நடைமுறையைத் தொடங்கி, பதவி முடியும் துணை வேந்தர், பதவி ஏற்கும் துணை வேந்தரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

தேவையான அளவு, அனைத்து நிலையிலும் பணியிடங்கள் உருவாக்கி நிரந்தர பணியில் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட‌ வேண்டும்.

அனைத்து சுயநிதிப் பாடப் பிரிவுகளும் அரசு நிதிப் பாடப் பிரிவுகளாக மாற்ற வேண்டும். அரசுப் பல்கலைக்கழகங்கள் அரசின் முழு நிதியில் இயங்க வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 வளாகம் இல்லாத படிப்பு என்ற சூழலை உருவாக்குகிறது.

அதற்கு ஏற்றார் போல் Outcome Based Education, Blended Mode of Learning, Massive Open Online Courses ஆகியவற்றை அறிமுகப் படுத்தி, அதற்கு ஏற்ப‌ பாடத்திட்டங்களை உருவாக்க வழி வகுக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுப் பாடத் திட்டம் (CS) என்பது பல்கலைக்கழகம் என்ற‌ அமைப்பே தேவை இல்லை என்பதற்காகத் தான்.

OBE, BL, CS ஆகிய தேசியக் கல்விக் கொள்கை 2020ன் கூறுகள் கல்வியியல் செயல்பாட்டை முற்றிலுமாக சிதைத்துவிடும். இவற்றை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இன்று காணப்படும் சிக்கல்கள் குறித்த விரிவான விவாதம் நடத்தி தீர்வுகள் காணப்பட வேண்டும்.‌

மாநில அரசின் முழு நிதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களும் இயங்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் மாணவர் பேரவைத் தேர்தல் முறைப்படி நடத்த வேண்டும்.‌

பல்கலைக்கழக வளாகங்களில் மக்களாட்சி மாண்புகளை மதித்து மாணவர்கள்‌ மற்றும் ஆசிரியர்களின் வளாக செயல்பாடுகள் அனுமதிக்க வேண்டும்.‌

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் குடியரசு (Federal Government of USA) நிபந்தனைகளை விதித்து, அவற்றை ஏற்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்க இயலாது என்று அறிவித்தது.‌

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அரசின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தது. எந்த சூழலிலும் கல்வியியல் சுதந்திரத்தை (Academic Freedom), சிந்தனையை வெளிப்படுத்தும் சுதந்திரம் (Freedom of Expression), சமூக மற்றும் அரசியல் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட வளாக செயல்பாடுகளை (Campus Activism) தடை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.

அரசு நிதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.‌ பல்கலைக்கழகம் பின்வாங்க மறைத்து, அரசமைப்புச் சட்டத்தின் படி தனது சுதந்திரச் செயல்பாடு தொடரும் என்று அறிவித்துள்ளது.

இதே நிலைப்பாட்டை அந்நாட்டின் மற்ற முன்னணி பல்கலைக்கழகங்களும் மேற்கொண்டு வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் பல்கலைக் கழகங்களுக்கு அதிகாரத்திற்கு அடிப்பணிய மாட்டோம் என்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களின் போராட்டம் மிகப் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்துள்ளது.

இதற்கெல்லாம் முன்பாக‌‌ தமிழ்ப் புலவர் நக்கீரர் “நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று உறுதியாக இருந்து ஆசிரியர்கள் தங்களின் கல்வியியல் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறார்.

இன்றைய கூட்டத்தில் ஆக்கபூர்வமான முடிவுகள் மேற்கொள்ள பல்கலைக்கழகப் பொறுப்பாளர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செலாளா் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு அவா்கள் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.