மாத்திரை இல்லை … மருந்தாளுநர் இல்லை … மருத்துவ உபகரணங்கள் இல்லை … உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலம் !
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள சுமார் 18 கிராமங்கள் மற்றும் பச்சைமலை மலைவாழ் பழங்குடியினர் மக்கள் உள்ளிட்டோர் உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது உப்பிலியபுரம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் பணியாளர்கள் மருந்த ஆளுநர் மற்றும் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமானதாக இல்லாததாலும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட வேண்டியும்.
மேலும், கடந்த சில வாரங்களாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்கும் உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று அதற்குரிய மாத்திரைகளை பெரும் நோயாளிகளுக்கு உரிய மருந்தாளுநர் இல்லாததால் மருத்துவமனையில் வேறு சில பணியாளர்களை கொண்டு மருந்து மாத்திரைகள் நோயாளிகளுக்கு தரப்படுவதால் அதனை பெற்றுச்செல்லும் நோயாளிகள் தகுந்த மாத்திரைகளை கொடுப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாக புகார் எழுந்த நிலையில் பொதுமக்களாக தன்னெழுச்சியாக இன்று உப்பிலியபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பு ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
இதில் வழக்கறிஞர் சசிகுமார் மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்தி தரவேண்டியும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்பிலியபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை உடனடியாகபணியில் அமர்த்தி நோயாளிகளின் நலனை காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர்.
— ஜோஷ்.