2025 ஆம் ஆண்டு மீளாய்வு, அடுத்தாண்டு மேலுயர்வு!
வாழையூர்குணா எனும் பெயரில், நான் சிறுகதை, கவிதை, என எழுதியும், இலக்கியக் கூட்டங்களில் கலந்துக் கொண்டும், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவற்றில் பங்கேற்றும் இலக்கியப் பணியை செவ்வனே செய்து வந்துள்ளேன்.
அதில் ஒரு சில முக்கிய நிகழ்வுகளின் பகிர்வே இந்தக் கட்டுரை.
22.06. 2025 – உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் சார்பில் கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில் பாவீச்சு அதனூடாக ‘கவியரசர் கண்ணதாசன் இலக்கிய விருது’
20.07.2025 உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் சார்பில் ஈரோட்டில் நடைப்பெற்ற இலக்கிய திருவிழாவில் ‘செந்தமிழ்ச் செம்மல் மற்றும் ஈகைச் செம்மல் விருது.
02.08. 2025 – தஞ்சாவூரில் தமிழ்த்தாய் அறக்கட்டளை நடத்திய மாமன்னன் கரிகால் சோழனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட அணையில் முதல் முதலாக நடத்தப்பட்ட கல்லணை கவியரங்கத்தில் பாவீச்சு ‘கரிகால சோழன் நினைவு கவிமுரசு விருது.
23.08.2025 – புதுச்சேரிப் படைப்பாளர் சங்கத்தில் பங்கேற்று பாவீச்சு,அதற்கான பாராட்டுச் சான்றிதழ்,
18.09.2025 – திருச்சி தூய வளனார் கல்லூரி படைப்பிலக்கிய பயிலரங்கத்தில் பங்கேற்று கவிதை படைத்து பாராட்டுச் சான்று பெறப்பட்டது.
30.11. 2025 – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநாட்டில் கலந்துக் கொண்டு பாவீச்சு நடத்தி பாராட்டுப் பெற்றது,
6.11. 2025 – ‘வாழையூர் குணா சிறுகதைகள்…! என்னும் தலைப்பில் எனது முதல் நூலினை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்டது.
27.11.2025 – மகாகவி ஈரோடு தமிழன்பனுக்கு இரங்கல்பா வாசித்தேன்.
(காவேரி கவித்தமிழ் முற்றம்)
திருச்சிராப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி இயக்கம் நடத்திய நவம்பர் 1 தமிழ்நாடு அமைந்த நாள் விழாவில் பாவீச்சு நடத்தினேன்,
22.11.2025 – பெரம்பலூரில், நாகூர் அனிபா நூற்றாண்டு விழால் பாவீச்சு, பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பெறப்பட்டது.
பெரம்பலூரில் பாவலர் பெருஞ்சித்தினார் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாவீச்சு நடத்தியது,
பெரம்பலூர் தமிழ் இலக்கியப் பூங்கா நிகழ்ச்சியில் கீழடி குறித்து பாவீச்சு நடத்தியது.
பெரம்பலூரில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பாவீச்சு நடத்தியது.
21.12.2025, சென்னையில் பாரதி கலைக் கழகம் பைந்தமிழ்ச் செல்வர் விருது(2025),
12.12.2025 அன்று அகில இந்திய திருச்சிராப்பள்ளி வானொலியில் இன்றைய இலக்கிய ஆளுமை நிகழ்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்ட வாழையூர் குணா சிறுகதைகள் நூல் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு வானொலி நேயர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.
28.12.2025 – சென்னை தமிழ் மன்றம் கர்மவீரர் காமராசர் விருது(2025) பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறித்து பாவீச்சு நடத்தியது,
பெரம்பலூரில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையில் மாதந்தோறும் முழுநிலவுக் கூட்டத்தில் பாவீச்சு நடத்தியது.
29.12. 2018, செந்தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் தமிழ் வழிக் கல்வி இயக்கம் தமிழ் நாட்காட்டி உள்ள வெளியீட்டு விழாவில் நாள்காட்டி பொங்கல் விழா குறித்து பாவீச்சு நடத்தியது.
என பல்வேறு கவியரங்கத்தில் பங்கேற்று பாவீச்சு மற்றும் விருதுகளைப் பெற்று, தமிழ்கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்து வருகிறேன்.
மேலும்…

தமிழரிசை இதழில்
1.விருது,
2.வெறுமை,
3.குரல்,
4.முயல்குட்டி,
5.பெருக்கான்வேட்டை,
6.பொங்கல் விழா,
7.குடீஸ்,
தன்னம்பிக்கை இதழில்,
8.கிரையப்பத்திரம்,
9.பத்தாயிரம்,
10.ஆகாயகங்கை
11.மகிழ்ச்சி மாலை
உயிர் எழுத்து இதழில்.
12.இரட்டை விருந்து
13.குப்பைக்காரி,
தங்க மங்கை இதழில்.
14. கிராப்
தினத்தந்தி நாளிதழில்…
கவிதை வெளியானது.
* காவேரி முத்தமிழ்ச் சங்கம் திருச்சி, யுகபாரதி விருது 2025.
* குயிலோசை குழுமத்தின் கவிதைப் போட்டி பாராட்டுச் சான்றிதழ் பெறப்பட்டது.
* கவிதை தோட்டத்தின் வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்டது.
இப்படி இந்தாண்டு பல்வேறு பத்திரிகைகளில் சிறுகதை,கவிதை, நூல் என வெளியீட்டு அகமகிழ்ச்சியடைந்தேன்.
இதற்கெல்லாம் மணிமகுடம் சூடும் வகையில்
28.12.2025, அன்று, புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதினை சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் மயிலம், பொம்மபுர ஆதினம் 20 ஆம் பட்டம் அவர்களின் பொற்கரத்தால் பெறப்பட்டது. அதற்கு அடிதளமிட்டவர்,
திருமிகு: மணிகண்டன், மாநில பொதுச் செயலாளர், மற்றும் விழா குழுவினர்கள்.
மேலும் பத்திரிகையாளர் சங்கத்தினருக்கு இதய நன்றி.
எதிர் வரும் 2026, புத்தாண்டில் மாதந்தோறும் புதிய நூல் வெளியிட வேண்டும் என சபதம் ஏற்றுள்ளேன், அதை நிறைவேற்ற சூளுரைப்பேன்.
உள்ளன்புடன் அனைவருக்கும் புத்தாண்டு,பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
— வாழையூர்குணா…








Comments are closed, but trackbacks and pingbacks are open.