ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய VAO மற்றும் தலையாரி கைது!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பந்தல்குடி, வதுவார்பட்டி பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சின்னத்தம்பி (34) இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை நான்கு மால் அளவு பார்க்க விண்ணப்பித்துள்ளார்.
இதற்கு வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் இப்ராஹிம் (55) பல நாட்களாக சின்ன தம்பியின் நிலத்தை அளவீடு செய்யாமல் காலம் தாழ்த்தியுள்ளார்.

பின்னர் இறுதியாக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை அளக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத சின்னத்தம்பி இது குறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்ட சின்னத்தம்பி நீங்கள் கேட்ட லஞ்சப் பணம் ரெடியாக இருக்கிறது, எங்கு வந்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

மறுமுனையில் பேசிய கிராம நிர்வாக அலுவலர் இப்ராஹிம் எனது அலுவலகத்திற்கு வந்து தலையாரி சிங்காரத்திடம் கொடுக்கும் படி தெரிவிக்கவே, அதன்படி அவர் அங்கு சென்று லஞ்சப் பணத்தை கொடுக்கவே அப்போது,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அங்கு மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன், தலைமையிலான காவல் ஆய்வாளர்கள், பூமிநாதன், உதவி ஆய்வாளர் ஹரி சூர்யா ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத் துறையினர். தலையாரி சிங்காரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இப்ராஹிம் ஆகிய இருவரையும் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கைது செய்தனர்.
மேலும் இந்த லஞ்ச வழக்கில் கைதான தலையாரி சிங்காரம் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
— மாரீஸ்வரன்.