புதுவித சுவை தூண்டும் வரகரிசி பொங்கல்! சமையல் குறிப்பு – தொடா்-51
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி வரகரிசி பொங்கல். இது உடம்பிற்கு வலுவூட்டுவதாகவும் சத்தானதாகவும் புதுவித சுவை தூண்டுவதாகவும் இருக்கும். வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1 கப் வரகு அரிசி, 1/4 கப் உடைத்த பாசி பருப்பு, ½ கப் ஓம நீர் + 3 ¼ நீர், சிட்டிகை மஞ்சள் பொடி, தேவையானது உப்பு.
தாளிக்க:-
¼ கப் நெய், 1 மேஜை கரண்டி சீரகம், 1 மேஜை கரண்டி இஞ்சி பொடியாக நறுக்கியது, 1 மேஜைகரண்டி மிளகு, 20 முந்திரி, 1 பச்சை மிளகாய், துண்டாக்கியது, 20 கறிவேப்பிலை, சுண்டைக்காய் அளவு கட்டி பெருங்காயம்.
செய்முறை:-
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணி தேவையான பொருட்களை எடுத்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்கவும். மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் வரகு அரிசி, உடைத்த பாசி பருப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும் (1நிமிடம்). ஒரு கிண்ணதில் வறுத்த வரகு அரிசி, உடைத்த பாசி பருப்புடன், மஞ்சள் பொடி, ஓம நீர், மொத்தம் நீர் 3 ¾ கப் ; இது மிகவும் முக்கியம் பிரஷர் சூக்கரில் வைத்து வேக வைக்கவும். ஜீரண சக்தியை அதிகரிக்க ஓம நீர்.

தாளிக்க: இதுதான் பொங்கலுக்கு தனி ருசி கொடுக்கிறது. ஒரு கிண்ணத்தில் ¼ கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் நன்றாக 30 நிமிடங்கள் ஊறி கரையட்டும் மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸாஸ்பேனில் சூடான மேஜைகரண்டி நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம். பிஞ்சு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வறுத்துக்கொள்ளுங்கள். மிளகு வெடிக்கும், ஜாக்கிரத்தை பெருங்காய கலவை ஊற்றுக, கொதிக்கட்டும் வறுத்த பொருட்களை வேகவைத்த பொங்கலோடு சேர்த்து கிளற. மீதி நெய்யும் பொங்கலோடு சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கிளற. சுவையான, மணமான, சத்தான பொங்கல் தயார்.
— பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.