அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எழுச்சித்தமிழர், சாதி தலைவா் அல்ல ! – விசிக தொண்டா்கள் வேதனை!

திருச்சியில் அடகு நகையை விற்க

அண்ணன் ஆ ராசா அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் 2ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நேரத்தில் அந்த வழக்கு ஒரு மோசடி வழக்கு,
சனாதன சங்கிகளால் புனையப்பட்ட போலி வழக்கு என மக்கள் மன்றத்தில் உங்களுக்காக வாதாடியவர் எங்களது குலசாமி தலைவர் எழுச்சித்தமிழர் Thol.Thirumavalavan அவர்கள். காரணம் சாதிப்பற்று அல்ல சமூக நீதிக்காக களத்தில் இருப்பவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஆ.ராசா
ஆ.ராசா

நீங்கள் சிறைக்கு சென்ற நேரத்தில் தன் இயல்பாக களத்தில் இறங்கி போராடியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.
காரணம் தன் சாதி என்ற பற்றால் அல்ல, சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் தலைவர் எழுச்சித்தமிழர் எங்களை வழி நடத்துவதால் அந்த உணர்வோடு, சனாதன சங்கிகளின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துவதற்காக களத்தில் நின்றோம்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

நாடாளுமன்றத்தில் நீங்கள் சபாநாயகராக அமர்ந்து அவையை நடத்திய போது, அதை பெருமிதத்தோடு தங்களது சமூக வலைதளங்களில் முகநூல் பக்கத்தில் பரப்பியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். அதில் நானும் ஒருவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு வெகுமக்கள் ஆதரவோடு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருமாவளவன்
திருமாவளவன்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைத்ததற்கு மிக முக்கிய காரணம் விடுதலைச் சிறுத்தைகள் என திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் ஒப்புக்கொண்ட நிலையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாதி ஒழிப்பு அரசியலை கடந்த 35 ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களிடம் பேசி வருவதை அறிந்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாத பலர் முக்கிய நிர்வாகிகளாக, தொண்டர்களாக செயலாற்றி வருகின்றனர் என்பதை அறிந்தும் தாங்கள் சமீபத்தில் ஒரு மேடையில், லட்சோப லட்ச மக்களின் குலச்சாமியாக திகழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை சாதி தலைவர் என தாங்கள் குறிப்பிட்டது மன வேதனையை தருகிறது. கண்டிக்கத்தக்கது.

அண்ணன் ஆ ராசா அவர்களே, அவ்வாறு தங்கள் பேசியது தவறு என தாங்கள் உணர்வீர்கள் அதற்காக பொதுவெளியில் வருத்தம் தெரிவிப்பீர்கள் என நம்புகிறோம்..

அங்கனூர் சிவா
மாவட்டச் செயலாளர், 

அரியலூர் சட்டமன்றத் தொகுதி விசிக

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.