கட்டிடத்தில் விரிசல் – சேதமடைந்த டைல்ஸ் கற்கள் ! தரமின்றி கட்டப்பட்ட வீரபாண்டி அரசு கலை கல்லூரி கட்டிடம் !
வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் பல்வேறு இடங்களில் கட்டிடம் விரிசல் அடைந்தும், டைல்ஸ் கல் சேதமடைந்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் பல்வேறு இடங்களில் கட்டிடம் விரிசல் அடைந்தும், டைல்ஸ் கல் சேகம் அடைந்துள்ளது.
வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உப்பார்ப்பட்டி -தப்புக்குண்டு சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் முழுவதும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டும், டைல்ஸ் கல் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
எனவே, கட்டிட முழுவதும் விரிசல் அடைந்து சேதம் அடைந்துள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.