அங்குசம் சேனலில் இணைய

பூங்கொத்துக்குப் பதிலாக காய்கறிக் கொத்து ! – சமூகத்தில் புதிய மாற்றத்தின் தொடக்கம் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிறந்தநாள், திருமணம், விழாக்கள் போன்ற சந்தர்ப்பங்களில் வழக்கமாக பூங்கொத்துகள் பரிசளிப்பது நம் சமுதாயத்தின் வழக்கம். ஆனால், இப்போது அந்த மரபில் ஒரு புத்துணர்ச்சி தரும் மாற்றம் தேவைப்படுகிறது என பலரும் வலியுறுத்துகின்றனர்.

பூங்கொத்துகள் சில மணிநேரத்திலேயே வாடிவிடுகின்றன. பரிசளிக்கப்பட்ட பூக்கள் பெரும்பாலும் வீணாகி, குப்பையில் வீசப்படுகின்றன. இதற்குப் பதிலாக, காய்கறிகள் மற்றும் சீசன் பழங்கள் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வறட்சியால் காய்கறிகள் சாகுபடி பரப்பு 60% குறைந்தது: உற்பத்தியாகும்  காய்கறிகளும் கேரளாவுக்கு செல்வதால் தட்டுப்பாடு | வறட்சியால் ...ரோஜாவுக்கு பதிலாக கொய்யா, பச்சை மாம்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், சப்போட்டா போன்ற சத்தான பழங்களை அளிக்கலாம். மேலும், பிளாஸ்டிக் கவர் அல்லது ரிப்பன் ஆகியவற்றை தவிர்த்து, பருத்தி துணி அல்லது கம்சா கொண்டு கூடையை அலங்கரிக்கலாம் — இது பின்னர் பயனுள்ள பொருளாக மாறும்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

பட்ஜெட்டுக்கு ஏற்ப கூடையின் அளவையும் மாற்றிக் கொள்ளலாம். பல்வேறு காய்கறிகள் விலை உயர்ந்திருந்தால், ஒரு அல்லது இரண்டு வகை காய்கறிகளைக் கூட பரிசளிக்கலாம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

காய்கறி தொகுப்புஇந்தச் சிறிய மாற்றம், நமது விவசாய சகோதரர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் ஒரு அழகான வழி. மேற்கத்திய மரபுகளை பின்பற்றுவதற்கு பதிலாக, நமது பூர்வீக கலாச்சாரத்தையும் உழைப்பையும் மதிக்கும் ஒரு நேர்த்தியான முயற்சியாக இது அமையும்.

சிறு மாற்றங்களே சமூகத்தில் பெரிய புரட்சிகளை உருவாக்கும். “பூவிற்கு பதிலாக பயனுள்ள கொத்து — நம் விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் இனிய வழி!” மாற்றத்தை தொடங்குங்கள் – நல்ல பழக்கமாய் மாற்றுங்கள்!

 

 —    ப. பிரபு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.