100 கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் முறைகேடு ! பிரபல தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷ் மகன் உள்ளிட்ட 5 அரசு  உயர் அதிகாரிகள் அதிரடியாக கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

100 கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் முறைகேடு  புகாரில் பிரபல தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷ் மகன் உள்ளிட்ட 5 அரசு  உயர் அதிகாரிகள் அதிரடியாக கைது !

 

Sri Kumaran Mini HAll Trichy

சென்னை அண்ணா நகர் மற்றும் சைதாப்பேட்டையில் அலுவலகம்  அமைத்து 15 க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது விஜிபி குழுமம். இதில் மிக முக்கியமாக நிலங்களை விலை கொடுத்து வாங்கி அவற்றை வீட்டுமனை பட்டாக்களாக  பிரித்து அரசு அனுமதி பெற்று விற்பனை செய்வதை மிக முக்கிய வியாபாரமாக செய்து வருகின்றனர் .

 

இக்குழுமத்தின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் வட்டத்தில் நெமிலி,  வடகால் மற்றும் ஆயக்குளத்தூர் பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் கிரையம் பெற்று அதில் விஜிபியின் பல பெயர்களைக் கொண்டு வீட்டு மனைகள் பிரிவுகள் உருவாக்கி அதை டிடிசிபி அப்ரூவல் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிடிசிபி அப்ரூவல் பெறுவதற்கு வீட்டுமனை உருவாக்கப்பட்ட பகுதிகளில் பொது உபயோகத்திற்கு, அந்த கிராம ஊராட்சிக்கு குறிப்பிட்ட இடத்தினை தானமாக கிரையம் செய்து அளிக்க வேண்டும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

VGS Amaladas Rajesh
VGS Amaladas Rajesh

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் மற்றும் பால் நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பங்குதாரர் ராஜதாஸ் என்பவர் மனை பிரிவுகளின் பொது உபயோகத்திற்காக சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு, கடந்த 1991 ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதூர் அலுவலகத்தில் பதிவு செய்து வழங்கி உள்ளார்.

 

Flats in Trichy for Sale

இதுபோன்ற நிலங்களை வி.ஜி.எஸ் அமலதாஸ் ராஜேஷ் சார் பதிவாளர் கூட்டு சேர்ந்து தானமாக வழங்கப்பட்ட இடங்களை ரத்து செய்து அதை விற்பனை செய்துள்ளனர். இதே போல் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் , பால் நல்லூர் , வல்லம் ஆகிய பகுதிகளில் தொழில் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்களையும் இதற்காக அரசிடம் பெற்று பணம் பெற்றுள்ளனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிப்பட்டு சார் பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் தான நிலங்களை ரத்து செய்து விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

CBCID
CBCID

இந்நிலையில்  காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் விஜிஎஸ் அமலதாஸ் ராஜேஸ், அதற்கு உடந்தையாக செயல்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்( இந்து சமய அறநிலையத்துறை, சென்னை ) மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த சார் பதிவாளர் ராஜதுரை (காஞ்சிபுரம் இணை பதிவாளர்) வட்டாட்சியர்கள் எழில் வளவன் (நில எடுப்பு பிரிவு காஞ்சிபுரம்), பார்த்தசாரதி (ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் ) மற்றும் உதவியாளர் பெனடின் ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து, 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

DRO நர்மதா
DRO நர்மதா

கைது செய்யப்பட்ட விஜிஎஸ்  அமலதாஸ் என்பவர் பிரபல விஜிபி குழுமத்தினை சேர்ந்த வி.ஜி.சந்தோஷ் என்பவரின்  மகன் ஆவார். கடந்த 20 ஆண்டுகளாக வீட்டு மனை பிரிவு போடப்பட்டு தற்போது பல்வேறு சாலை, புதிய தொழிற்சாலை பணிகளுக்காக அரசு கையகப்படுத்தும் போது அதிகளவில் பணம் கிடைக்கும் என  மோசடி செய்து விற்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசு நிலத்தை ஏமாற்றி வீட்டுமனை பிரிவுகளாக விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த இதையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி வரும் 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் அவர்களை செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். நில மோசடி வழக்கில் 5 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் காஞ்சிபுரம் நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ. நர்மதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போது நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி தற்போது தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

 

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.