அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘பொள்ளாச்சி பாலியல் வழக்கு’ – தீர்ப்பை வரவேற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி

0

திருச்சியில் அடகு நகையை விற்க

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து – விசிக இந்த தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் பேட்டி…

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமான் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விசிக கட்சிஅப்போது,”இந்திய ஒன்றிய அரசு அரசியலமைப்பு  சட்டத்திற்கு எதிராக வக்பு சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.வக்பு திருத்தச் சட்டம் என்பது இசுலாமியர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல, அரசியலப்பு சட்டத்திற்கு எதிரான தாக்குதல். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வலுவிலக்க வைப்பதே RSS, BJP  செயல் திட்டமாக உள்ளது. மதச்சார்பின்மையை எதிராக பாஜக வளர்ந்து வருகிறது. இந்த மாநாட்டில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என பிரதமர் அறிவிக்கவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தான் சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 2031 மக்கள் தொகை கணக்கு எடுக்கும் போது பாஜக ஆட்சியில் இருக்குமா என்று தெரியவில்லை.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

சாதி வாரி கணக்கெடுப்பு என்பது பீகார் தேர்தலுக்கான கண்துடைப்பு. 2031 வரை தள்ளி போடாமல் உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அய்யனார் கோவிலில் ஆதிதிராவிட சமுதாயத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தும் வழிபாடு நடத்த காவல்துறை அனுமதி தடை விதித்துள்ளார்கள்.

இரண்டு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளி தான் ஒரு பகையாக உருவெடுத்துள்ளது.பாதிக்கப்பட்ட நபர்கள் மீதே காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.தலித் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

விசிக கட்சி கூட்டம்நான் கலந்து கொள்ள இருந்த போராட்டத்திற்கு  அனுமதி மறுத்துள்ளது.பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு 9 பேரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு ஆறுதலை தருவதாக இருக்கிறது. இந்தியாவில் இப்படி ஒரு கூட்டு பாலியல் குற்றம் நடந்திருக்காது என்ற அளவிற்கு மோசமான சம்பவம் பொள்ளாச்சியில் நடந்துள்ளது. சட்டத்தின் படி அதிக பட்ச தண்டனை வழங்கப்பட்டால் தான் கூட்டுப் பாலியலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

போர் நிறுத்தப்படுவதாக இந்திய, பாகிஸ்தான் அரசு ஏன் அறிவிக்கவில்லை என்ற கேள்வி… எழுகிறது. மூன்றாவது நபர் தலையிட்டு பேசுவது தேவையான ஒன்று தான். ஆனால் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்ற சக்தி அமெரிக்கா தான் என்ற தோற்றம் உருவாகிறது. அமெரிக்கா ஏகாதிபத்தியம்  இருப்பதாக  தோற்றம் உருவாகிறது.

கல்லெடுத்து அடியுங்கள் மரத்தை வெட்டி என்ற நிலை மாறி எல்லாரும் படியுங்கள் எல்லோரும் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த பண்பு மாற்றம் வரவேற்கக் கூடிய ஒன்று.

அடங்கமறு, அத்துமீறு என்ற முழக்கம் சாதி அடிப்படையில் சொல்லப்பட்டது அல்ல. ஒடுக்குமுறை, ஆதிக்கத்திற்கு எதிராக போர் குணத்தோடு வெகுண்டடெல சொல்கிறோம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மதுரையில் நடைபெற்ற பேரணியில் காவல்துறை மிக மோசமாக நடந்து கொண்ட போது காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்ட முழக்கம் இது. சாதிக்கு எதிராகவோ, ஆதரவாகவோ முழக்கப் பட்டது அல்ல. இது உலகத்தில் உள்ள மொழி, இனம், பாலினத்துக்கும் பொருந்தும். ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறவர்கள் அஞ்சி ஒடுங்கக் கூடாது. ஆதிக்க ஒடுக்குமுறை சுரண்டலை எதிர்க்க வேண்டும் என பரந்த பார்வையோடு சாதி அடிப்படையில் எந்த அரசியலையும் விசிக முன் வைத்தது இல்லை. குறிப்பிட்ட சாதியினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை பேசியது இல்லை. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து தரப்புகளுகன முழக்கம் இது.

பட்டியிலன மக்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற அன்புமணி கருத்துக்கு

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதல்முறையாக இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என பேசியுள்ளர்கள். எப்போது இவர்கள் இப்படி பேசியது இல்லை. விகித்தாச்சார அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயரத்த வேண்டும் என்ற கோரிக்கை தான் வைக்க வேண்டும். பரிதாபத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று சொல்வது சமூகநீதி அல்ல. இருப்பினும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காட்டுகின்றன அக்கறைக்கும், கரிஸணத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது” என்றார்.

 

—         ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.