தமிழ்நாட்டை கதற விட்ட விஜய்!
உண்மையில் விஜய் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறார். அவரது ரசிகர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டை கதற வைத்துக்கொண்டு இருக்கிறார்.
- சாட்டை முருகன் பேசுவதையும், மாரிதாஸ் பேசுவதையும் அவர்களை எதிர்ப்பவர்களும் பகிரும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்.
- பாஜக நாதகவையெல்லாம் லெப்ட் கேண்டில் செய்யவர்களை, தவெக குஞ்சுகளிடம் எப்படி பேசுவது என புரியாமல் நிற்க வைத்திருக்கிறார்.
- கடுமையான அரசியல் விமர்சனங்களை சந்தித்த ரஜினியின் அரசியல் விலகல் எத்தனை நேர்மையானது என்பதை விஜய் புரியவைத்திருக்கிறார்
- கமலஹாசன், அஜீத், சூர்யா, விஜயகாந்த் போன்றவர்கள் மனிதநேயமிக்கவர்கள் என்பதை புரிய வைத்து இருக்கிறார்.
- உண்மையில் மாஸ்டர் படத்தில் விஜய் செய்ய வேண்டிய கேரக்டர் பவானி தான் என்பதை நேற்று உணர வைத்து இருக்கிறார்!
- அரசு இயந்திரம் இயங்கவில்லை என்கிற கேள்விக்கு பழக்கப்பட்ட தமிழ்மக்களிடம் – அரசு இயந்திரம் ஏன் வேகமாக இயங்குகிறது என்கிற கேள்வியை கேட்டு திகைக்க வைக்கிறார்.
- பாஜகவை விட கேவலமான கட்சியை தமிழ்நாடு பார்க்காது என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கிறார்.
- இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அங்கிகரிக்கபடாத ஒரு கட்சியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு விஜய் தான் முதல் எதிரி என்று பேசி ஷாக் கொடுக்கிறார்.
- Rules and Regulations எங்களுக்கு கிடையாது, அப்படி இருந்தால் அது மீறப்படும் என்று வரும் சினிமா வசனத்தை நிஜவாழ்வில் தனது தொண்டர்களை உசுப்பேத்தி செய்ய வைத்து மாஸ் காட்டுகிறார்.
- சொப்பனசுந்தரி காரை போல விஜய்யும் விஜய் கட்சியும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருந்து 41 பேரை சாகடித்திருக்கிறார்
மொத்தத்தில் விஜய் தமிழ்நாட்டை கதற விட்டுக்கொண்டு இருக்கிறார் 🔥🔥🔥
– ராஜராஜன். RJ
Comments are closed, but trackbacks and pingbacks are open.