அங்குசம் சேனலில் இணைய

கரூர் மரணங்களுக்கு முன் – பின் விஜய் செல்வாக்கு?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2026 தேர்தலில் விஜய் கட்சி 125 – 155 இடங்களை வெல்லும் என்கிற பெயரில் என்கிற தகவலை சோசியல் மீடியாவில் பரவிக்கொண்டு இருக்கிறது. இது தவெகவின் பி.ஆர் டீமும் பரப்பலாம் அல்லது அவர்களை கூட்டணிக்கு அழைக்கும் அதிமுக – பாஜகவின் பி.ஆர் டீமும் உருவாக்கி ட்ரென்ட் செய்துயிருக்கலாம். எதுவாக இருந்தாலும் இதை உண்மை என நம்புகிறவர்கள் அரசியல் களம் அரியாத கத்துக்குட்டிகள் அவ்வளவே.

சினிமாவில் ஹீரோ நாப்பது பேரை அடிக்கலாம் நிஜத்தில் இரண்டு பேரைக்கூட அடிக்கமுடியாது. தேர்தல் களத்தை சினிமா போல் நினைக்கிறார்கள் விஜய்யும், அவரது ரசிகர்களும். விஜய் கட்சி 125 இடங்களை அல்ல 2 இடங்களை வெல்லும் அளவுக்கு கூட வலிமையில்லாத ஒரு கட்சியாக தான் தவெக இப்போதுவரை இருந்துவருகிறது. விஜய் ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒருவேளை அந்த தொகுதியில் வெற்றி பெறலாம். மற்றப்படி எந்த தொகுதியிலும் விஜய் கட்சி டெப்பாசிட் வாங்க முடியாத அளவுக்கே இருக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

Shouted for help…': Survivors recount Karur stampede, say 'expected Vijay  to arrive on time' | Latest News Indiaவிஜய்கான வாக்கு என்பது தீவிர ரசிகர் பட்டாளத்தின் வாக்குகளும், ஆளும்கட்சி மீதான அதிருப்தியாளர்களும், அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியில் இருக்கும் புதிய கட்சிகளை தேடுபவர்களின் வாக்குகளும் தான். இதுதான் விஜய் போகும் இடங்களில் அவருக்கு கூட்டமாக கூடியது. இந்த கூட்டத்தை அடுத்தடுத்து பார்த்துவிட்டே அரசியல் கட்சிகள் முதல் தேர்தல் கணிப்பு நிறுவனங்கள் வரை விஜய் கட்சி முதல் தேர்தலில் எவ்வளவு வாக்குகள் வாங்கும் என யூகித்துக்கொண்டும், அலசிக்கொண்டு இருந்தன. விஜய்க்கு சாதகமானவர்கள் 15, 20 சதவிதம் என்றார்கள். பல தேர்தல்களை பார்த்த களம் குறித்து தெரிந்தவர்கள் அதிகப்பட்சம் 10 சதவித வாக்குகள் வாங்குவார் எனச்சொன்னது. என் கணிப்பு 7 சதவிதம் என்றளவிலேயே முன்பு இருந்தது.

நான் 7 சதவிதம் எனச்சொல்லக்காரணம், விஜய் கட்சி ஆரம்பித்தபோது மக்களிடம் பெரும் வரவேற்பு என எதுவும்மில்லை. மீடியாக்கள் தான் விஜய்க்கான ஹெப்பை ஏத்திக்கொண்டு இருந்தன, இருக்கின்றன. மக்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பு விஜய் மீதோ அவரது கட்சி மீதோ கிடையாது. நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது, அவரது பேச்சை, செயலை பார்த்தவர்கள் இவரால் தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவார்கள் என நினைத்தார்கள். அப்படியொரு தாக்கம் விஜய் மீது இன்றவும் மக்களுக்கு கிடையாது. அப்படிப்பட்டவரின் கட்சிக்கான வாக்கு இப்போது குறைந்திருக்கும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஏன் எனில் ?????

விஜய் அரசியலை கரூர் மரணங்களுக்கு முன்………… கரூர் மரணங்களுக்கு பின் என இரண்டாக பிரிக்கவேண்டும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கரூரில் விஜய்யால் தான் 42 பேர் மரணமடைந்தார்கள் என்பது எளிய மக்களுக்கும் புரிந்தே இருக்கிறது. விஜய் பிரச்சார பேருந்து மீது நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது அவரைக்காண வந்தவர்கள் ரசிகர்கள், தொண்டர்கள் செத்து  விழுகிறார்கள்….. மயக்கமடைந்து விழுகிறார்கள், அது தெரிந்தபின் தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசுகிறார்………… உடனே அங்கிருந்து தப்பி ஓடுகிறார். இதுயெல்லாம் தொலைக்காட்சி, இணைய வீடியோக்களில் மக்கள் பார்த்துவிட்டார்கள்.

செந்தில் பாலாஜி தான் காரணம், காவல்துறை தான் காரணம் என விஜய்யும், அவரது தரப்பும் இணையத்தில் நரேட்டிவ் செட் செய்தாலும், விஜய்யுடன் கூட்டணி சேர துடிக்கும் கட்சிகள் ஒரு தியரியை உருவாக்கினாலும், நூற்றுக்கணக்கான பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த தமிழக மக்களுக்கு தெரியும் இந்த விபத்து எதனால், எப்படி நடந்தது என்று. விபத்து என மக்கள் கடந்து சென்றுயிருப்பார்கள், விஜய்யின் முட்டாள்தனமான பயந்தாங்கொல்லி செயல்கள் அவரை மக்கள் ஒதுக்கிவைத்துவிட்டார்கள்.

He ran away': Vijay's quiet flight after Karur stampede draws flakவிஜய் தனது வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு, சம்ப இடத்தை விட்டு தப்பி விமானமேறி சென்னைக்கு ஓடியது. இறந்தவர்களுக்கு அவரது கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தது. மரணத்துக்கு இதுவரை குறைந்தப்பட்சம் மன்னிப்பு கூட விஜய் கேட்காதது, சம்பவம் நடந்து 20 நாட்களை கடந்தபின்பும் இதுவரை இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லாதது. குழந்தைகள் உட்பட 42 பேர் அநியாயமாக பலியான துக்கத்தில் இறந்தவர்களின் மீது போடப்பட்ட மாலைகள் வதங்கும் முன்பே தனது வீட்டில் ஆயுதபூஜைக்கு அந்த பிரச்சார பேருந்துக்கு பூஜை போட்டு கொண்டாடியது போன்றவை எல்லாம் மக்களிடம் விஜய் மீது வெறுப்பை தான் உருவாக்கிவைத்துள்ளன. இதை விஜய் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும், பேசினாலும் சரி செய்யமுடியாது. என்னை ஆளும்கட்சி தடுத்துவிட்டது, போலிஸ் தடுத்துவிட்டது என வாய்க்கு வந்த காரணத்தை சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள். இதையெல்லாம் எதிர்த்து செய்யவேண்டியதுதான் அரசியல்.

ஆளும்கட்சியான திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலின், இது விபத்து இதில் அரசியல் செய்யமாட்டோம் என பொறுமை காத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம், விஜய் டீமை கைது செய்யாமல் பொறுமைக்காத்ததால் வந்த விமர்சனங்களை கேட்டுக்கொண்டு அமைதிக்காத்து விஜய்யின் அரசியலை பக்காவாக காலி செய்துவிட்டார். விஜய் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, அடுத்தடுத்த பயணங்களில் தவறுகள் நடக்காது என அறிவித்து மன்னிப்பு கேட்டுயிருந்தால் இந்த விவகாரம் ஓரளவு டேமேஜ்ஜோடு முடிந்திருக்கும். தன்னை காப்பாத்திக்கொள்ள திமுக மீது பழியை போட்டதுதான் விஜய்யும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக, பாஜக தலைவர்கள் செய்த பெறும் தவறு. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் மக்கள் நடிகர்கள், அரசியல்கட்சிகள் சொல்வதை நம்புவார்கள். இது டெக்னாலஜி உலகம் அங்கே நடந்தது லைவ்வாக ஒளிப்பரப்பானது, சோசியல் மீடியாக்களில் பலப்பல வீடியோக்கள் வெளிவந்தன.

41 பேர் பலியான கரூர் விஜய் கூட்ட நெரிசல் வழக்கு: உச்சநீதிமன்றம் எழுப்பிய  சரமாரி கேள்விகள் Karur Vijay meeting Stampede Tragedy: Supreme Court Raises  a Flurry of Tough Questionsஉச்சநீதிமன்றம் ஆணையம் அமைத்த விவகாரத்தில் வெளியான விவகாரம் எளிய மனிதர்களையும் விமர்சிக்கவைத்துவிட்டது. உச்சநீதிமன்றம் மூலமாக விஜய்க்கு புதைக்குழி தயாராக இருக்கிறது. கூட்டணி என்கிற புதைக்குழிக்குள் விஜய் இறங்கும்பட்சத்தில் அவரின் அரசியல் அப்படியே மூழ்கி சமாதியாகிவிடும். தனித்து நிற்கும் பட்சத்தில் 5 சதவித வாக்குகளை விஜய் கட்சி வாங்கினால் ஆச்சர்யம். அதாவது தனித்து நிற்கும்பட்சத்தில் சீமான் கட்சிக்கம் விஜய் கட்சிக்கும் யார் 5 சதவித வாக்குகளை வாங்கி கட்சியை தக்கவைத்துக்கொள்வது என்கிற போட்டி நடக்கும். தேர்தல் முடிவில் சீமான் காணாமல் போவார். விஜய் தாக்குபிடித்து ஆந்திரா சிரஞ்சீவியாக மாற அதிக வாய்ப்புண்டு.

 

—   ராஜா பிரியன், பத்திரிகையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.