விருதுநகரில் 3.0 !!!
ரிக்டர் அளவுகோலில் 3.0 – விருதுநகர் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் | இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சில பகுதிகளில் அதிர்வு.
தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவலின்படி, ரிக்டர் அளவுகோலில் 3.0 அளவிலான லேசான நிலநடுக்கம் விருதுநகர் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களால் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் விருதுநகர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் லேசான அதிர்வுகளை உணர்ந்த நிலையில், இதுவரை எந்தவிதமான உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.