அங்குசம் சேனலில் இணைய

மனைவி இரண்டு மகள்களை வெட்டிக் கொன்ற கொடூர கணவன்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தரவேலு இவரது மனைவி பூங்கொடி இந்த தம்பதியினருக்கு ஜெயதுர்கா(10), ஜெயலட்சுமி(7) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தின் போது சனிக்கிழமை அதிகாலை மீண்டும் இருவரும் பிரச்சனை செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சுந்தரவேலு
சுந்தரவேலு

அப்போது ஆத்திரமடைந்த சுந்தரவேலு அம்மிக்கல்லை தலையில் போட்டும் அருவாளால் மனைவி  இரண்டு பெண் குழந்தைகளையும் சரமாரியாக வெட்டி உள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ரத்த வெள்ளத்தில் துடி துடித்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பின்னர் சுந்தரவேலு அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தடயங்களை சேகரித்து உடல்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் பார்வையிட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மற்றும் மகள்களை கணவரே கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

—    மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.