அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மணல் திருட்டு ! சிக்கிய 4 வாகனங்கள் ! 7 பேர் மீது வழக்கு !

திருச்சியில் அடகு நகையை விற்க

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சண்முகாபுரம் பகுதியில் மணல்  திருட்டில் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்

சாத்தூர் வட்டாட்சியர் ராஜாமணி, உதவியாளர் ஜெயராஜ், கிராம உதவியாளர் ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில்  செவ்வாய்க்கிழமை (10.09.2025) அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது சுமார் 2 மணியளவில், சண்முகாபுரம் சுடுகாட்டுக்கு தெற்குப் பகுதியில் உள்ள ஓடையில், TN 84 F 8448 என்ற எண் கொண்ட JCB, மேலும் TN 67 BE 9982, TN 65 AP 1279, TN 45 X 6859 உள்ளிட்ட 3 டிராக்டர்களும் பதிவு எண் இல்லாத டிராக்டர்களுடன்  மணலை அள்ளிக் கொண்டு இருந்தன.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மணல் திருட்டுவருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தபோது, மண் அள்ளிய அவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர். இதில், TN 65 AP 1279 டிராக்டரின் டிரைவரான பாஸ்கரன் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், மீதமுள்ள டிராக்டர்கள் ஈஸ்வரன், பார்த்திபன் ஆகியோருக்குச் சொந்தமானவை என்றும், டிரைவர்கள் சதீஸ், ரஞ்சித்குமார் ஆகியோர் எனவும் தெரியவந்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மணல் திருட்டுபின்னர், கைப்பற்றப்பட்ட JCB மற்றும் 3 டிராக்டர்களும் சுமந்திருந்த 2 யூனிட் சரளை மணலும் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையம் ஒப்படைக்கப்பட்டது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மேலும் இந்த சம்பவம் குறித்து வருவாய்த் துறையினர் அளித்த புகாரில் அனுமதியோ நடைசீட்டோ இன்றி சட்டவிரோதமாக கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட 7 நபர்கள் மீது ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 2 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

  —   மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.