அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வாக்காளர் பட்டியல் தில்லு முல்லு ! உஷாரய்யா உஷாரு !

திருச்சியில் அடகு நகையை விற்க

தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனம் இன்னும் தெளிவாக CID மூலம் அம்பலம் ஆகி உள்ளது. சங்கிகள் சட்டத்தின் பிடியில் வசமாக சிக்கியுள்ளனர். தண்டிப்பது இனி நேர்மையான கோர்ட்டு கையில் உள்ளது. பார்க்கலாம்.

நடந்த சம்பவம்…

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மிகவும் திகில் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகளுடன் கூடிய திரைப்படம் காண்பது போல உள்ளது சகோ.

துவக்கம் எங்கிருந்து என்றால்…

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

கர்நாடகாவில் 2023 ஆம் ஆண்டு மே மாத சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக…

அங்கே ஆலந்த்தா என்று ஒரு சட்டமன்றத் தொகுதியில், 2023 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம், ஓர் ஊரின் BLO விடம்… அந்த பகுதி வாக்குச்சாவடியில் சில வாக்காளர்களின் பெயரை நீக்கச் சொல்லி ஒருவரிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பம் வருகிறது.

எப்படின்னா… அந்த வாக்காளர்கள் எல்லாம் வீடு மாறி… போய்விட்டதாக காரணம் கூறி படிவம் 7 பூர்த்தி செய்து ஆன்லைனில் “ஒருவர்” விண்ணப்பிக்கிறார். அந்த “ஒருவர்” யாரெனில்… அதே வாக்குச்சாவடியில் உள்ள வேறொரு வாக்காளர். நேர்மையான BLO என்பவர் அந்தந்த முகவரி தேடி சென்று சரிபார்ப்பு செய்து பின்னர் தான் வாக்காளரை நீக்க வேண்டும்.

அதில் ஒரு விண்ணப்பதை பார்த்த அந்த நேர்மையான BLOவுக்கு ஷாக்..!

 வாக்காளர் பட்டியல் நீக்க வேண்டிய வாக்காளர் ஃபோட்டோவை கண்டதும் அதிர்ச்சி அடைகிறார். ஏனென்றால்… வாக்காளர் பட்டியலில் இருந்து  நீக்கப்பட வேண்டிய அந்த விண்ணப்பத்தில் இருந்த வாக்காளர்.. அந்த BLO வின்  உடன் பிறந்த சகோதரர்..!

தன் சகோதரர் பற்றி மிக நன்றாக அறிந்த BLOக்கு… இன்னும் தன் சகோதரர் அதே முகவரியில்தான் வசித்து வருகிறார், என்பதும் தெளிவாக தெரியும்.

உடனே… இது ஒரு மோசடி என்று புரிந்து கொண்ட BLO, தன் சகோதரருக்கு இதுபற்றி தகவல் சொல்கிறார். அவரும் அதிர்ச்சி அடைகிறார். இவர்கள் இருவரும்… அதே வாக்குச்சாவடியில் உள்ள அந்த விண்ணப்பம் அனுப்பிய நபரை கடும் கோபத்துடன் தொடர்பு கொண்ட போது, அவரோ அத்தகைய கோரிக்கையை தான் அனுப்பவே  இல்லை, என்று திட்டவட்டமாக மறுத்து சத்தியம் செய்து விட்டார். அவருக்கும்… அந்த BLO சகோதரர்க்கும் எந்த முன்விரோதமோ… அரசியல் பகையோ கிடையாது. ஆகவே… அவர் பெயரில் வேறு யாரோ… BLO வின் சகோதரரை நீக்க சொல்லி போலியாக விண்ணப்பம் அனுப்பியதும் மோசடி என்று…. மோசடிக்குள்ளே மோசடி நடந்து இருப்பது BLO விற்கு தெரிய வருகிறது. மேலதிகாரிக்கு BLO இதுபற்றி புகார் அளித்து விசாரணை செய்ய கூறி விட்டார்.

அந்த BLO சகோதரர் மூலம் விஷயம் கேள்விப்பட்டு காங்கிரஸ் கட்சியும் விழித்துக்கொண்டது. இதுபோன்ற போலியான படிவம் 7 விண்ணப்பங்கள் மூலம் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதற்கு பல்வேறு BLO களுக்கு போலி விண்ணப்பம் அனுப்பப்பட்டு சதி நடக்கிறது, என தெரிய வந்ததும்… அப்போது எதிர்க்கட்சி ஆக இருந்த காங்கிரஸ் மேலும் உஷார் ஆகிறது.

எந்த அளவுக்கு என்றால்… அதே ஆலந்தா தொகுதியில் தோண்டி துருவி பார்த்ததில்… அந்த தொகுதியின்  256 வாக்கு சாவடிகளில், 5,994 பெயர்கள் நீக்கப்பட படிவம் 7 விண்ணப்பம் ஆன்லைன்  மூலம் செய்யப்பட்டுள்ளன என்றும்…  2,494 பெயர்கள் இப்படி முன்பே விண்ணப்பம் பெறப்பட்டு நீக்கப்பட்டு விட்டன என்றும் அதிர்ச்சி மிக்க உண்மை தெரிய வருகிறது .

உடனே, காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் இது பற்றி புகார் அளிக்கிறது. வேறு வழியின்றி… தேர்தல் நேரத்தில் பிரச்னை வேண்டாம் என்று… தேர்தல் அதிகாரி… நடவடிக்கை எடுக்க வேண்டிதாகிறது. படிவம் 7 மூலம் பிறரால் பூர்த்தி செய்து ஆன்லைனில் வந்ததன் அடிப்படையில் நீக்கப்படவிருந்த வாக்காளர்களை எல்லாம் காங்கிரஸ் கட்சியின் அந்த ஆதார பூர்வமான புகார் தடுத்து நிறுத்தியது. இதன் மூலம் சுமார் 6000 வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாமல் தப்பினார்கள்.

India election: ineligible 17-year-old votes 8 times for PM Modi's BJP, as  rivals claim fraud in polls | South China Morning Postமேலும்… ஆல்ரெடி பெயர் நீக்கப்பட்டவர்கள் பற்றி காங்கிரஸ் கொடுத்த புகாரால் … சுமார் 2500 பேர் நீக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் Undo போடப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இப்படியாக…சுமார் 8500 வாக்காளர்கள்… பட்டியலில் காக்கப்பட்டு… அவர்கள் அந்த 2023 மே மாத சட்டமன்ற தேர்தலில் ஆலந்தா தொகுதியில் வாக்களித்தனர்.

2023 மே மாதம் நடந்த ஆலந்தா சட்டமன்ற தேர்தலில்… காங்கிரஸ் வேட்பாளர் 10,348 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தொகுதியில்  வெற்றி பெற்றார்.

சப்போஸ்… ஒருவேளை…

இந்த மோசடி கவனிக்கப்படாமல் போயிருந்தால், மேலும் ஒரு 2000 வாக்காளர் நீக்க விண்ணப்பம் வந்து… காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட வேண்டிய நபர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அங்கே காங்கிரஸ் 50 அல்லது 100 ஓட்டுகளில்… வேறொரு தொகுதியில் ராகுல்காந்தி அம்பலப்படுத்திய #வாக்குத்திருட்டு போல… இங்கேயும் காங்கிரஸ் தோற்றிருக்கலாம்..!

நல்லவேளையா அந்த BLO  சகோதரர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்பதால் காங்கிரஸ் களத்தில் இறங்கியது மட்டுமின்றி… நீக்கம் செய்யப்பட வந்த விண்ணப்பம் BLO வின் சொந்த சகோதரர் என்பதால்தான்… இந்த #ஓட்டுத்திருட்டு மோசடி வெளிச்சத்துக்கு வந்து  தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது..!

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேற்படி #VoteTheft  எல்லாம் வாக்காளர் பட்டியல் நீக்கம் பற்றி மட்டுமே. எவ்ளோ போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து இருப்பார்களோ… தெரியவில்லை. அது வேறு கதை. ராகுல்காந்தி அம்பலம் செய்த #VoteChori சம்பவங்கள்.

மேற்படி…. போலி படிவம் 7 மூலம் வாக்காளர் நீக்கம் குறித்த தேர்தல் மோசடி பற்றி…. 2023ல் காங்கிரஸ் அப்போது காவல்துறை வசம் கொடுத்த புகாரின் அடிப்படையில் FIR பதிவு செய்யப்பட்டு, பிறகு மாநில அரசால் வழக்கு CID க்கு அனுப்பப்பட்டது.

பாஜக தோற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர்… கர்நாடக மாநில CID… அந்த போலி விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் எல்லாம் யார் யார் என கண்டுபிடிக்க விசாரணையை துவங்கியது.

தோண்டி பார்த்தால்… மேலும்  மேலும் திடுக்கிடும் மர்மங்கள் வெளியே வந்தன.

அந்த போலி விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டதால், போலி விண்ணப்பதாரர் யாரையும்… சாதாரணம் ஆக ஐபி அட்ரஸ் மூலம் யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி… ஹை டெக்  அறிவோடு டைனமிக் ஐபி அட்ரஸ் பயன்படுத்தியதால் புலனாய்வு விசாரணையில் சிக்கல் எழுந்தது.

தேர்தல் ஆணையம்தமக்கு எந்த கணினியில் இருந்து விண்ணப்பம் வந்தது என்கிற டெஸ்டினஷன் ஐபி மற்றும் போர்ட்ஸ் தரவுகளை தேர்தல் ஆணையம்… மாநில சிஐடி காவல் துறைக்கு  தர மறுத்துவிட்டது..! இது எவ்வளவு பெரிய குற்றம்…? அப்படின்னா… தேர்தல் ஆணையம் இதில் உடந்தை என்பது இங்கே அம்பலம் ஆனது.

ஆகவே… இதற்கு மேல் புலனாய்வை தொடர முடியாத முட்டு சந்து நிலை… கர்நாடக சிஐடி க்கு ஏற்பட்டது.

ஆக… திருட்டுத்தேர்தல் ஆணையம்

முக்கியமான அந்த தரவுகளை தர மறுத்து… ஒரிஜினல் வாக்காளர்களை நீக்க போலி விண்ணப்பம் அனுப்பிய குற்றவாளிகளை பிடிக்க முடியாதபடி சிஐடி விசாரணையை  தடுத்து நிறுத்தி வைத்துவிட்டது.

இருந்தாலும்… சிஐடி விடவில்லை.

எத்தனுக்கு எத்தன்டா நான்… என்பது போல் சிஐடி விடாமல்… வேறு வழியில் துப்பு துவங்கியது.

அதாவது… ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பிய போது… அந்நேரத்தில் சென்ற OTP தரவுகள் மூலம்… 9 மொபைல் எண்களை புலனாய்வில் அபாரமாக சிஐடி கண்டுபிடித்தது .

அந்த 9 மொபைல் எண்களும்… கர்நாடகாவே இல்லை என்கிற மற்றொரு அதிர்ச்சி தெரியவந்தது. ஆம்… அவை ஒவ்வொரு எண்ணும்… ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது.

உடனே அவ்விரு மாநிலங்களுக்கும் விரைந்த CID காவல் துறையினர்… அந்த எண்ணுக்கு உரியவர்களை கண்டதும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம்… அவர்கள்… அறவே படிக்காத கிராமத்தில் வாழும் பாமரர்கள். படிவம் 7 பற்றியோ … வாக்காளர் பட்டியல் பற்றியோ… அதில் நீக்கம் பற்றியோ … அவ்ளோ ஏன்… இணையம், கணினி, ஸ்மார்ட் போன் பற்றியோ… துளிகூட அறிவே இல்லாதவர்கள்.

ஆக… OTP மெசேஜ் ஹேக் செய்யப்பட்ட ஒரு மாநில மொபைல் போன்களிலிருந்து… இன்னொரு மாநிலத்தின் ஏதோ ஒரு தொகுதியின் ஏதோ ஒரு வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் உள்ள குறிப்பிட்ட சில  வாக்காளர்களை நீக்குதல் தொடர்பான #மெகாமோசடி நடைபெறுகிறது என்பதை கர்நாடக சிஐடி கண்டு பிடித்து விட்டனர்..!

இனிமேல்… ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு துறை உதவி செய்தால் மட்டுமே… மேற்கொண்டு எங்கிருந்து மொபைல் OTP ஹேக் செய்யப்பட்டது … யார் இந்த பல்லாயிரக்கணக்கான போலி விண்ணப்பங்களை அனுப்பிய குற்றவாளிகள் … என்று கண்டு பிடிக்கலாம். அல்லது, CID கேட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் தந்தால் கண்டு பிடிக்கலாம்.

மேற்கண்ட மொத்த சம்பத்தின் இறுதி காட்சி மட்டுமே சன் நியூஸ் செய்தி ஸ்லைடில் நீங்கள் பார்க்கிறீர்கள்.

அடப்பாவிகளா..!

எப்படி எல்லாம் தீவிரமாக திட்டமிட்டு… அதிநவீன தொலை தொடர்பு மற்றும் இணைய கணினி தொழில்நுட்பத் திறமையை எல்லாம் கொட்டி… ஒரு மாநில காவல்துறையின் உயர்ந்த அமைப்பான சிஐடி கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு… பக்கா லேட்டஸ்ட் டிஜிட்டல் டெக் தளங்களைப் பயன்படுத்தி, வேறு மாநில போலி தொலைபேசி எண்கள் மூலம், தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன்… ஒரேயொரு சட்டமன்ற தொகுதியிலேயே பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களை நீக்கியும், பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்களை ஜீரோ வீட்டு முகவரிகளில் சேர்த்து … ஒரே வீட்டில் பல நூறு போலி வாக்காளர்களை சேர்த்து, இன்னும் முதல் முறை ஓட்டு போடும் வாக்காளர் என்று 85 வயதை  தாண்டிய வயோதிகர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து…வீட்டில் இருந்த படியே வாக்களிக்கும் அவர்களின் படிவம்12D மூலம்… தேர்தல் அதிகாரி விரும்பிய சின்னத்தில் ஒரே பட்டனில் மாலை 6 மணிக்கு மேலே வாக்குச்சாவடியில் ஓட்டு குத்தி…   வாக்குச்சாவடிகளின்  சிசிடிவி காட்சிகளை தர மாட்டோம் என சட்ட திருத்தம் போட்டு… அதையும் 45வது நாள் அழித்து விடுவோம் என்று மற்றொரு சட்டத் திருத்தம் செய்து… அடேயப்பப்பா… என்னென்ன  தில்லுமுல்லுகள், மோசடிகள், முறைகேடுகள், ஜனநாயக படுகொலலை.

 

—      முகமது ஆசிக்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.