வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு  ஒருவரும் விடுபடாமல் வாக்களிப்போம் ! திருச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பிரச்சாரம் !

வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்”, “எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது 100 விழுக்காடு தவறாமல் வாக்களிப்போம் ...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு  ஒருவரும் விடுபடாமல் வாக்களிப்போம் !
திருச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பிரச்சாரம் !

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் பொன்மலை கே சாத்தனூர் 63-வது வார்டு பகுதியில் பொன்மலை உதவி ஆணையர் சண்முகம் தலைமையில்  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சேர்மன் ராஜசேகரன் வழிகாட்டுதல் படி  செயலாளர் ஜவகர்ஹசன் நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன், ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தந்தை பெரியார் கல்லூரி தமிழ் துறை இணை பேராசிரியர் முனைவர் குணசேகரன், செயலாற்று குழு உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலையில் பாராளுமன்ற பொது தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க “வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்”, “எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது 100 விழுக்காடு தவறாமல் வாக்களிப்போம்” என விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

“உங்கள் வாக்கு உங்கள் குரல்” என கே சாத்தனூர் கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு, குமாரசாமி தெரு, பாலமுருகன் தெரு, காவல்காரன் தெரு, சாத்தனூர் பிரதான சாலை,  அமராவதி கூட்டுறவு நியாய விலை அங்காடி பகுதியில் பொதுமக்களை  சந்தித்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை நிர்வாகிகள் மற்றும் இந்திரா கணேசன் கல்லூரி  மாணவர்கள் ‌‌ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.