“முதல்வாின் காக்கும் கரங்கள்“ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்களுக்கு தொழில் கடன் பெறுவதற்கு வழிவகை
மாண்புமிகு முதலமைச்சா் அவா்கள் 78-வது சுதந்திரதினத்தன்று (15.08.2024) ஆற்றிய சுதந்திரதின உரையின் போது முன்னாள் படைவீரா் நலனுக்காக “முதல்வாின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும்,
இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும் இவா்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், இராணுவப் பணியின் போது உயிாிழந்த படைவீரா்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் எனவும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை சாா்ந்த சுயதொழில் செய்யவிரும்பும் முன்னாள் படைவீரா்கள் /படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரா்களின் கைம்பெண்கள் தங்களது விருப்ப விண்ணப்பத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரா் நலதுணை இயக்குநா் அலுவலகத்தில் கீழ்கண்டமுகவாியில் 15.10.2024-க்குள் சமா்ப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவா்
திரு.மா.பிரதீப்குமார் இ.ஆ.ப.,அவா்கள் தொிவித்துள்ளார்.
வெளியீடு:
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.