அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தலைக்கவசத்தின் விலையோ ரூ.2500 ! மருத்துவ செலவோ ரூ.30,000 !

திருச்சியில் அடகு நகையை விற்க

நானும் எனது மனைவியும் Honda Activa -வில் சென்றோம். வாகனத்தில் செல்கையில்  நான் எப்போதும் தலைக்கவசம் அணிவேன். என் மனைவிக்கு தலைக்கவசம் இல்லை. அணியவில்லை. அதிக வேகம் செல்லவில்லை. 45 லிருந்து 50 Km/ hr வேகம். தரையில் மணல். எனக்கு முன் சென்ற வாகனம் நின்று விட்டதால் . நான் பிரேக் அடித்தேன். மணல் சறுக்கி நானும் எனது மனைவியும் விழுந்து விட்டோம். பின்னால் ஒரு கார் வேகமாக வந்தது. வந்த வேகத்தில் அந்த கார் மேலேறியிருந்தால் straight – ஆக சுடுகாடுதான். நல்ல வேளை, அந்த கார் ஓட்டுநர் நிறுத்திவிட்டார்.

எனக்கு கை கால்களில் சிராய்ப்பு, அடி, முழங்காலில் பலத்த அடி, தலை தப்பித்தது தலைக்கவசத்தால். என் மனைவிக்கு தலையில் பலத்த அடி. ஆனால் ரத்தம் வரவில்லை. அருகில் மருத்துவமனை இல்லை. நான் அதே Honda Activa வை ஓட்டிச் சென்று   என் மனைவியை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் சென்றேன்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியாத 12 ஆயிரம் பேருக்கு அபராதம்இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி MRI, CT, X Ray , மூளையில் ரத்தம் உறையாமலிருக்க ஊசி மருந்து, தங்கிய செலவு  என  30,000 ஆகி விட்டது. கடுமையான மன உளைச்சல். அலைச்சல் .

ISI தர தலைக்கவசத்தின் விலையோ ரூ.2500. மருத்துவ செலவோ ரூ.30,000/- பின்னர் என் மனைவி தேறிவர இரண்டு வாரமானது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பின்னர் என் மனைவிக்கு தலைக்கவசம் வாங்கினேன். அன்றிலிருந்து இன்றுவரை என் வாகனத்தில் ஓட்டும் நான் மட்டுமல்ல  பின்னிருக்கையில் பயணிப்பவரும் தலைக்கவசம் அணிந்தபடியே பயணிக்கிறோம்.

கோவையில் தலைக்கவசம் அணியாதோருக்கு போலீஸ் கடுமையான penalty  போடுகின்றனர். ஆனால் தஞ்சையில் இந்த கெடுபிடிகள் இல்லாத காரணத்தால் பெரும்பாலோனோர் தலைக்கவசம் அணியாமலேயே வண்டி ஓட்டுகின்றனர்.

ஓட்டுபவர் மட்டுமல்ல உடன் பயணிப்பவரும் அணியவேண்டியது தலைக்கவசம். இல்லையெனில் அதற்கு நாம் தர வேண்டிய விலை  உயிர்.

— பாரதி சுந்தர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.