₹1.44 கோடி நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிய அமைச்சா்!
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த நலத்திட்ட பணிகளை தமிழ்நாடு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார்.
மொத்தம் ₹1 கோடியே 44 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை, கலையரங்க கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
சிறுக்குளம், மாயூர்நாதபுரம், தோட்டிலோவன்பட்டி பகுதிகளில் பயணிகள் நிழற்குடைகள் திறப்பு.
கணபதியாபுரம் – புதிய கலையரங்கம் மற்றும் ரேஷன் கடை கட்டிடம் தொடக்கம்.
சங்கராபுரம் – புதிய சமுதாய கூட கட்டிடம் திறப்பு
பெருமாள்பட்டி – சமுதாய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டல்.
முள்ளிச்செவல் – ரேஷன் கடை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டல்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா, சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் உமா, ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ், கட்சி நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.