இப்படி ஒரு வாட்சப் மெசேஜ் வருகிறதா ? இதை மட்டும் செய்து விடாதீர்கள் !
வாட்ஸ் அப் குழுக்களில் தற்பொழுது SBI,CUB,ICICI, AXIS, HDFC Bank பெயர்களில் தங்களின் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் App லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான link மற்றும் செய்தி.
அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அந்த Linkஐ Click செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் Click செய்தால் உங்களுடைய *Mobile Phone Hack செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவார்கள். மேலும் உங்களின் Whatsapp hack செய்யப்படும்.
சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இணைய வழி சம்மந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930/ 04132276144/ 9489205246 எண்கள் மூலம் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.