அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

திருச்சியில் அடகு நகையை விற்க

தேர்தல் வியூக வகுப்பாளர்கள் இல்லாமல் அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திப்பது என்பது ’கடல்லயே இல்லையாம்’ என்கிற அளவுக்கு மாறிவிட்டது. நூறாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி தொடங்கி இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத தமிழக வெற்றிக்கழகம் வரை..,அது விதிவிலக்கல்ல… பிரசாந்த் கிஷோர், சுனில் கனகோலு,ராபின் சர்மா, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட சில பெயர்கள் நமக்குப் பரிச்சயமானவை.. தவிர, அரசியல் கட்சிகளே சொந்தமாக நிறுவனங்களை நடத்தி வரும் கதைகளும் உண்டு.

அணிலின் தமிழக வெற்றிக் கழக அரசியல் வியூக வகுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும், ஜான் ஆரோக்கியசாமி யார்?

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பிரசாந்த் கிஷோர் பீகாரைப் பூர்விகமாகக் கொண்டவர்..,

சுனில் கனகோலு கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்தவர்..

https://www.livyashree.com/

ஜான் ஆரோக்கியசாமி ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டவர்..

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் லயோலா கல்லூரியில் தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.., தமிழ்நாட்டில் படித்ததால் தமிழ் நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவர்..,

பட்டப்படிப்பை முடித்தபிறகு, Perfect Relations என்கிற நிறுவனத்தில் மேனேஜராக நான்கு ஆண்டுகளும் Good Relations India  என்கிற நிறுவனத்தின் இயக்குநராக 12 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். Persona Leadership Advisory Pvt Ltd என்கிற நிறுவனத்தை 2017-ல் சொந்தமாகத் தொடங்கி 2021 வரை நடத்தி வந்திருக்கிறார். அதேபோல, JPAC Persona என்கிற நிறுவனத்தைத் தொடங்கி தற்போது வரை நடத்தி வருகிறார்..,

ஜான் ஆரோக்கியசாமி செய்த பணிகள்..

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2017 மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனாவுக்கு இந்த நிறுவனத்தின் Girish Dhoke ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்..,

ஜான் ஆரோக்கியசாமி
ஜான் ஆரோக்கியசாமி

அதேபோல, 2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் ஆலோசனைக் குழுவோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் ஜான் ஆரோக்கியசாமியும் Girish Dhoke வும்..

தமிழ்நாட்டில் எடுத்துக்கொண்டால், 2016 தேர்தலில், தமிழ்நாட்டில் பாமகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தது இந்த நிறுவனம்தான்..,மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்கிற கோஷங்களை முன்வைத்து தமிழகம் முழுவதும் பாமகவையும் மருத்துவர் அன்புமணி ராமதாஸையும் கொண்டு சேர்த்ததில் இந்த நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு..,

அதேபோல, 2021 தேர்தலில், “இது மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி’’ என்கிற முழக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சிக்கும் வேலை செய்துள்ளார் ஜான் ஆரோக்ய சாமி.

கடந்த அதிமுக ஆட்சியில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு பிராண்டிங் வேலைகளையும் இந்த நிறுவனம் செய்திருக்கிறது..,

ரஜினி கட்சி ஆரம்பிக்க நினைத்தபோது, அவருக்கு வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அப்போது செய்திகள் வெளியாகின…

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு சேலத்தில் அரசியல் பயிலரங்கம் நடத்தப்பட்டது.., அதுமட்டுமல்லாமல், பெரியார் பிறந்தநாளுக்கு நேரடியாக, பெரியார் திடலுக்கே சென்று விஜய் மாலை அணிவித்தது தொடங்கி விஜயின் கடைசிப் படமான ஜனநாயகன் போஸ்டர் தயாரிப்பு வர ஜான் ஆரோக்கியசாமியின் பங்கு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.