அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?

திருச்சியில் அடகு நகையை விற்க

சமையல் உலகத்திலிருந்து சினிமா வரை தன்னுடைய உழைப்பால் பெயர் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். “மேஹந்தி சர்கஸ்” படத்தில் அமைதியான முகத்துடன் அவர் வெளிப்பட்டபோது, பலர் அவரை ஒரு புதிய, நேர்மையான முகமாகப் பார்த்தார்கள். ஆனால் வாழ்க்கை திரைக்கதை மாதிரி எப்போதும் நம்ம விருப்பப்படி நகராது. இப்போது அவர் பெயர் பேசப்படுவது சினிமாவுக்காக அல்ல ஒரு உறவின் சிக்கலுக்காக. இந்தக் கதையின் மையத்தில் மூன்று பேர் இருக்கிறார்கள், ரங்கராஜ், அவரது மனைவி ஷ்ருதி, மற்றும் டிசைனர் ஜாய் கிரிசில்டா.

மாதம்பட்டி ரங்கராஜ்ஷ்ருதி ,ஒரு வழக்கறிஞர். பல ஆண்டுகளாக ரங்கராஜுடன் குடும்பமாக வாழ்ந்து வருகிறார், குழந்தைகளும் உள்ளனர். ஜாய், சினிமா உலகில் ஆடை வடிவமைப்பாளராகப் பிரபலமானவர். விவாகரத்து ஆனவர். அவர் தன்னுடைய வாழ்க்கையிலும், கலைத்துறையிலும் தன்னம்பிக்கை மிக்க முகம். ஒரே நபரைச் சுற்றி, இரண்டு பெண்களின் வாழ்க்கையும் உணர்வும் மோதிக்கொண்டுள்ளன. இதில் யார் தவறு, யார் நியாயம் என்று நாமறிய முடியாது; ஆனால் மனித உணர்வுகள் எவ்வளவு நொடியில் சிக்கலாக மாறி விடுகின்றன என்பதை இது வெளிப்படுத்துகிறது. நம்பிக்கையின் நொறுக்கு சத்தம் யாரை நாம் உயிருக்கு மேலாக நம்புகிறோமோ,

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மாதம்பட்டி ரங்கராஜ்அவர் செய்யும் நம்பிக்கை துரோகம், அன்பின் துரோகம், குடுத்த வாக்குறுதியை உடைத்து நம் மனத்தின் ஓசையை அமைதியாக்கும் ஒரு துயரம். அன்பின் நினைவுகளை சாம்பலாக்கும் அமைதியான நெருப்பு., அந்த நெருப்பு நம் நம்பிக்கையை சாம்பலாக்கி, ஆன்மாவை எரிக்கும் உணர்வு..

அந்த வலியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை…

https://www.livyashree.com/

ஒரு உறவில் துரோகம் என்றால் அது காதல் முடிவல்ல,

ஒரு மனிதனின் உள்ளம் சிதறும் அந்த நொடியே.

அது ஜாய்க்காகவோ, ஷ்ருதிக்காகவோ மட்டும் அல்ல

இது அந்த நம்பிக்கையால் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் பொருந்தும் உண்மை.

உண்மை எப்போதும் இரு பக்கங்களில்தான் இருக்கும்.

ஜாய் கூறியுள்ளார்: “நான் ரங்கராஜை நம்பினேன், அவருடன் திருமணம் செய்தேன்.” மற்ற பக்கம், ரங்கராஜ் இதைப்பற்றி மௌனமாக இருந்தாலும், சட்ட வழியில் தன் பக்கம் சரி என்பதைக் கூறுகிறார்.

ஷ்ருதி தனது அமைதியோடு இந்த நிலைமையை எதிர்கொண்டிருக்கிறார் . அவர் பக்கம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், ஒரு மனைவியின் அமைதிக்குள் எத்தனை கேள்விகள் இருக்கும்!

ஒரு மனைவி தன் கணவனே தன் உலகம், தன் நம்பிக்கை, தன் உறுதி என்று நம்பி வாழ்கிறாள். அவனது ஒவ்வொரு சொல், ஒவ்வொரு பார்வையும் தன்னுடையது என்று கருதுகிறாள். ஆனால் ஒருநாள், அதே கணவனின் முகத்தோடு, வேறொரு பெண்ணுடன் அன்பாக இருக்கும் படங்களும் வீடியோக்களும் அவள் கண்முன் திறக்கப்படும்போது… அந்த நொடி அவளுக்கு மரணத்தைவிட மோசமானது.

மாதம்பட்டி ரங்கராஜ்அவள் பார்த்த அந்த காட்சிகள் சாதாரண காட்சிகள் அல்ல. அவனிடமிருந்து ஒருகாலத்தில் கேட்ட அதே சொற்கள், அதே பார்வைகள், அதே பாசம். இப்போது அவை வேறொருவருக்காக இருப்பதை உணரும்போது, அவள் மனம் எரியும் நெருப்பாய் மாறி, உடல் மட்டும் உயிருடன் நிற்கும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அவளுக்கு தோன்றும் உணர்வு “நான் வாழ்ந்தது பொய்யா? நான் கேட்ட அன்பு வார்த்தைகள் எல்லாம் ஒரு நாடகமா?”

அந்த நொடியில் அவள் மனம் பிளந்த கண்ணாடி போல சிதறும்; அதில் அவளது நம்பிக்கையின் முகம் இனி பிரதிபலிக்காது.

உணர்வுகள் நசுங்கி, கண்ணீரே அவளது குரலாக மாறும்.

அவள் அழவில்லை என்றாலும், அவளுள் நடக்கும் அழுகை ஒரு மௌன அலறல் , அன்பை இழந்த ஒரு ஆன்மாவின் அலறல். சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் படி, ஷ்ருதி ரங்கராஜ் அவரை வெளிப்படையாக ஆதரிக்கிறாரா என்பது உறுதி இல்லை.

அவள் சில பதிவுகளில் குடும்ப ஒற்றுமை மற்றும் நன்றி குறித்து கூறியிருந்தாலும், அது நேரடியாக ரங்கராஜை ஆதரிக்கும் வகையில் இல்லை. அவளது அமைதி. சிலருக்கு ஆதரவாகத் தோன்றலாம், ஆனால் அது ஒரு மனைவியின் அமைதியான வலிமை என்றும் சொல்லலாம்.

மாதம்பட்டி ரங்கராஜ்இது ஒரு உறவின் நுட்பமான திசை:

ஒருவர் நம்புகிறார், ஒருவர் தப்பிக்கிறார், ஒருவர் தாங்குகிறார். இன்று ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு பிரச்சனையும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

நாமே பார்ப்போம், யாரோ ஒருவரை விமர்சிப்போம், அல்லது ஆதரிப்போம். ஆனால் உண்மையில் அந்த மூவரும்  ரங்கராஜ், ஜாய், ஷ்ருதி , மூன்றுபேரும் ஒரு தனிப்பட்ட போராட்டத்தில் வாழ்கிறார்கள். இந்த அனுபவம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு: அன்பு மட்டுமே போதாது. சட்டரீதியான உறுதி, நம்பிக்கையின் ஆழம், மற்றும் பாதுகாப்பு  இவை அவசியம்.

ஆண்களுக்கு: ஒவ்வொரு வாக்குறுதியும் ஒரு பொறுப்பு. ஒருவரை நம்ப வைப்பது எளிது, ஆனால் அந்த நம்பிக்கையை தாங்கி நிற்பது தான் ஆண்மையின் உண்மையான அளவு.

இது எந்த ஒருவரையும் குறைசொல்லும் கதையல்ல. இது நம் சமுதாயத்திற்கான விழிப்புணர்வு அன்பை நம்புங்கள், ஆனால் விழிப்புடன் நம்புங்கள்.

அன்பு ஒரு உணர்வு; பொறுப்பு ஒரு ஒப்பந்தம்.

அன்பு அழகாக இருக்க, அந்த இரண்டும் சமமாக இருக்க வேண்டும்.

 

 —   மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.