அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

யார் இந்த ராஜேந்திர அர் லேகர் …?

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாட்டின் ஆளுநராக ( 2021-2026 முதல் சுமார் நான்கு ஆண்டுகள்  இருந்து வந்த RN ரவி இன்று(06.03.2026) அதிரடியாக மாற்றப்பட்டு அவரை மேற்குவங்க மாநில ஆளுநராகவும் , கேரளா மாநில ஆளுநராக  ராஜேந்திர அர்லேகர்(71) தமிழ்நாடு ஆளுநராக இன்று (06.03.2026) முதல் பொறுப்பேற்கிறார் .

யார் இந்த ராஜேந்திர அர் லேகர் …?

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கோவா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்  தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

தனது குழந்தை பருவத்திலேயே ஆர் எஸ் எஸ் -இன் உட்பிரிவான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக்கில் இணைந்து தனது சமூக பங்களிப்பினை செய்தார்.

Trich Job

அதன் பிறகு 1989- ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பின்பு கோவா மாநில பாஜகவின் மிக முக்கிய அரசியல் புள்ளியாக உருவெடுத்தார்.

இவர் பாஜகவில் பொதுச் செயலாளர், கோவா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், கோவா தொழில் வளர்ச்சி கழகம் தலைவர், கோவா மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டு கழகம் பொதுச் செயலாளர்.

கோவா மாநில முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர்  2014-ம் ஆண்டு மனோகர் பாரிக்க ர் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி ஏற்றபோது, அர்லேக்கர் அடுத்த முதலமைச்சராக பரிசீலக்கப்பட்டவர் .

ராஜேந்திர அர் லேக
ராஜேந்திர அர் லேக

ஆனால் பாஜக டெல்லி மேலிடம் அவருக்கு பதிலாக லஷ்மி காந்த் பர்சேகரை அடுத்த முதலமைச்சர் ஆக தேர்வு செய்தது.

கோவா சட்டப்பேரவையை காகிதமில்லாததாக மாற்றிய பெருமைக்குரியவர் அர்லேகர் .

அவ்வாறு செய்த முதல் மாநில சட்டமன்றம் கோவா.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மாநில சட்டமன்றத்தில் 1999- ஆம் ஆண்டு நடந்த கோபமா மாநில சட்டமன்றத்தில் வாஸ்கோடாமா சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று 1508 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம்  தோல்வி அடைந்தார்.

மீண்டும் அதே தொகுதியில் 2002- ஆம் ஆண்டு போட்டியிட்டு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை 1096 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மாநில சட்டமன்றத்திற்கு நுழைந்தார்.

2007-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தொகுதியில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 612 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

2012- சட்டமன்றத் தேர்தலில் பெர்னெம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

2012-2015 காலகட்டங்களில் கோவா மாநில சபாநாயகர் ஆக பணியாற்றினார்.

2015-ல் மனோகர் பாரிக்கர் அமைச்சரவையில்  வனம் மற்றும் சுற்றுச்சூழல், ஊராட்சி அமைச்சராக பணியாற்றினார்.

மாநில ஆளுநராக இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த பண்டாரு தத்தாத்ரேயா அரியானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட போது , அர்லேகர் இமாச்சல பிரதேச மாநில பிரதேச 21-வது ஆளுநராக  (ஜூலை13,2021 முதல்- பிப்ரவரி 13, 2023 முதல்

சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றினார் )

அதன் பிறகு பீகார் மாநில 28-வது ஆளுநராக (பிப்ரவரி 16,2023 முதல், ஜனவரி 1, 2025 முதல் ) சுமார் ஒரு வருடம் பணியாற்றினார்.

அதன் பிறகு கேரள மாநில ஆளுநராக (ஜனவரி 2, 2025 முதல் மார்ச் 5 2026 வரை சுமார் ஒரு வருடம் பணியாற்றினார்)

அதன் பிறகு தற்போது இன்று தமிழ்நாட்டின் மாநில ஆளுநராக அர்லேகர் இன்று (06.03. 2026) நியமிக்கப்பட்டுள்ளார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.