அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – 3வது நீதிபதி நியமனம் ! தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையும் ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – வழக்கு இரு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்புகள் 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் – தலைமை நீதிபதி அறிவிப்பு ! தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையும்? பரபரப்பு தகவல்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் கைது சட்ட விரோதமானது என்று ஆட்கொணர்வு மனுவைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்து ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு 04.07.2023ஆம் நாள் காலை 10.30 மணிக்கு நீதிபதி நிஷா பானு மற்றும் பரதச் சக்கரவர்த்தி ஆகியோர் வழங்கினார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

நீதிபதி நிஷா பானு - நீதிபதி பரகத் சக்கரவர்த்தி
நீதிபதி நிஷா பானு – நீதிபதி பரகத் சக்கரவர்த்தி

நீதிபதி நிஷா பானு அவர்கள் தன் தீர்ப்பில்,“செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது. மனித உரிமைக்கு எதிரானது என்பதால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கினார். மதுரையிலிருந்து காணொளியில் தீர்ப்பு வழங்கிய மற்றொரு நீதிபதி பரதச் சக்கரவர்த்தி,“செந்தில் பாலாஜி கைது அமலாக்கத்துறையின் விதிகளின்படி சரியானது. செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்கலாம். மருத்துவமனையில் செந்தில் பாலாஜி இருந்த காலத்தை நீதிமன்றக் காவலாகக் கருதமுடியாது” என்று தீர்ப்பு வழங்கினார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை 3ஆவது நீதிபதி ஒருவர் மீண்டும் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி,“செந்தில் பாலாஜியின் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3ஆவது நீதிபதியாக இருந்த விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3ஆவது நீதிபதியின் விசாரணை 06.07.2023ஆம் நாள் வியாழக்கிழமை பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
நீதிபதி சி.வி.கார்த்திகேயன்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த வழக்கு எப்படி நடைபெறும்? 3ஆவது நீதிபதியின் தீர்ப்பு செந்தில் பாலாஜிக்குச் சாதகமாக அமையுமா? அல்லது அமலாக்கத்துறைக்குச் சாதகமாக அமையுமா? என்று கேள்வி பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் இம்ரான்னுல்லா இது குறித்துப் பேசும்போது,“செந்தில் பாலாஜி கைது வழக்கில் 3ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நேர்மையான நீதிபதி என்று பெயரெடுத்தவர். பாண்டிச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி Vs முதல்வர் நாராயணசாமி இடையே அதிகாரம் குறித்த வழக்கில் மிகவும் நேர்மையாகத் தீர்ப்பு வழங்கியவர் என்ற பெருமை உடையவர். இந்த வழக்கைப் பொறுத்தவரை மீண்டும் இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதங்களை முன்வைப்பார்கள். புதிய ஆவணங்கள் இந்த வாதங்களில் சேர்த்துக்கொள்ளப்படாது. 3ஆவது நீதிபதி இந்த வழக்கை ஒரு வாரத்தில் விசாரித்துத் தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்த வழக்கில் 3ஆவது நீதிபதியின் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதில் ஒரு பரபரப்பு உள்ளது என்பது உண்மைதான். முதலில் நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பில், “செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்றும், உச்சநீதி மன்றம் சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் கைது கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. பணப் பரிமாற்றம் வங்கியின் வழியாக நடைபெற்றிருப்பதால் அந்த ஆவணத்தின் அடிப்படையில் கைது செய்யலாம். கைது செய்யப்பட்டவுடன் மனைவி, உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படாமல் இருந்தது என்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் வங்கி ஆவணங்கள் அடிப்படையில் கைது செய்த பிறகு விசாரணை நடத்துவதும், நீதிமன்றக் காவலில் விசாரணை நடத்துவது என்பதற்கான விதிகள் அமலாக்கத் துறைக்கு வழங்கப்படவில்லை. இதனால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம்” என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி நிஷா பானு - நீதிபதி பரகத் சக்கரவர்த்தி
நீதிபதி நிஷா பானு – நீதிபதி பரகத் சக்கரவர்த்தி

மற்றொரு நீதிபதி பரதச் சக்கரவர்த்தி தன்னுடைய தீர்ப்பில்,“அமலாக்கத்துறையின் விதிகளின்படி கைது நடவடிக்கைகளை யாருக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால் இந்தக் கைது நடவடிக்கை சரியானது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தொடர வாய்ப்பு உள்ள நிலையில், கைது நடவடிக்கையை உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் எதிர்த்துள்ளதைப் பரதச் சக்கரவர்த்தி கணக்கில் கொள்ளவில்லை. நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள நிலையில் அவரை விசாரணைக்கு அனுமதி கோர அமலாக்கத் துறைக்கு விதிகளில் இடமில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவில்லை” என்பதால், “3ஆவது நீதிபதி அவர்கள் நீதிபதி நிஷா பானு தீர்ப்பில் வழங்கியுள்ள விவரங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 3ஆவது நீதிபதி வழங்கும் தீர்ப்பு செந்தில் பாலாஜிக்குச் சாதகமாக அமையும் வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.