“மானம் என்பது உடலில் இல்லை… மனத்தில் தான் இருக்கிறது” – வழக்கறிஞர் மதிவதனி

0
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை சார்பாக பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை சார்பாக பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு

“மானம் என்பது உடலில் இல்லை… மனத்தில்தான் இருக்கிறது”  திராவிட கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி பேச்சு ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை சார்பாக பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல் தலைமை வகித்தார். ஆணும் பெண்ணும் இணைந்த சமூகமாக இளைய சமுதாயம் வலுப்பெறுகிறபோது எதிர்கால தேசம் தலை நிமிர்ந்த தேசமாக அமையும் என்பதை நம்முடைய தலைமை உரையில் பதிவு செய்தார்.

தொடர்ந்து வாழ்த்துரையாற்றிய கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், காலத்தின் தேவைக்கும் சமூகத்தின் தேவைக்கும் ஏற்ப தலைப்புகளில் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது கல்லூரித் தமிழாய்வுத் துறையின் தனிச்சிறப்பு. அந்த அடிப்படையில் மாணவியருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை திட்டமிட்டு அதற்கு சரியான ஆளுமையான வழக்கறிஞர் மதிவதினையை அழைத்து நிகழ்ச்சி நடத்தி இருக்கிற தமிழாய்வுத்துறையை மனம் நிறைந்து பாராட்டுவதாக குறிப்பிட்டார். தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி முன்னிலை வகித்தார்.

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில் அர் என்கிற வினைமுற்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே‌ ஆனால் அதை மறந்து அது ஆண்களுக்குரிய அடைமொழியாகவே பயன்படுத்தப்பட்டு வருகவது ஏன் என் விழா எழுப்பினார். இந்தக் கல்லூரியில் பேராசிரியர்களைக் குறிப்பிடுகிறபோது ஆண், பெண் இருபாலரையும் பேராசிரியர் என்று குறிப்பிடுவதை மகிழ்வோடு கருவுவதாக குறிப்பிட்டார்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

எப்போதுமே ஆண் தோழர்கள் பெண்ணியச் சிந்தனைகளை பெண் விடுதலைக்கூறுகளை உள்வாங்குகிறபோது தன்னுடைய வயது ஒத்த தோழிகளின் பிரச்சனையாகக் கருத்தாது தம்முடைய தாயின் பிரச்சினையாக, தன்னுடைய செல்ல மகளின் பிரச்சினையாக கருதுகிறபோது அதை முழுமையாக உள்வாங்க முடியும்.

பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு
பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு

சமூக மாற்றத்திற்கு அடிப்படையாக அமைவது வெற்றுக்கல்வி அல்ல. கல்வியோடு பெரியாரைப்போல அம்பேத்கரைப்போல, மார்க்ஸைபோல சமூக அறிஞர்களின் கருத்தால், அந்தக் கருத்துக்கு ஏற்றது போன்ற முன்மாதிரியான வாழ்க்கையால்தான் நமக்குக் கிடைத்துள்ளது. எனக்கு பற்றிய உடல் பற்றிய கவலை இல்லை. காரணம் அழகு என்பது நிரந்தரமற்றது.‌ மானமும் அறிவுமே மாந்தருக்கு அழகு என்ற பெரியார் கருத்தை ஏற்றுக்கொண்டதே அதற்குக் காரணம். எனவே பெண்ணை சதையாக, பொருளாகப் பார்க்காமல், அந்த சதையைத் தாண்டி அவர்களின் மாண்பைப் பார்க்கிறவர்களாக மாணவர்கள் மாற வேண்டும் என்பதே இந்த பகிர்வின் நோக்கம். மானம் என்பது உடலில் இல்லை… மனத்தில்தான் இருக்கிறது உள்ளிட்ட கருத்துக்களைப் பதிவு செய்தார்.

தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியரும் பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஆ.இராஜாத்தி வரவேற்புரை ஆற்றினார். முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி ஸ்ரீ ரேவதி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை முனைவர் பட்ட ஆய்வாளர் உமா மகேஸ்வரி தொகுத்து வழங்கினார். இளங்கலை மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழாய்வுத்துறை பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

– ஆதன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.