விருதுநகரில் அரசு உணவு பொருள் சேமிப்பு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சடையம்பட்டி அருகே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு குடோன் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. இதன் மூலமாக 122 ரேஷன் கடைகள் 357 சத்துணவு கூடங்களுக்கு அரிசி,எண்ணெய், பருப்பு,கோதுமை, சர்க்கரை, போன்ற சமையல் உணவுப் பொருட்கள் தனியார் லாரிகள் மூலம் ஏற்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த உணவுப் பொருட்களை ஏற்றி இறக்கவும், சாத்தூர் உணவு சேமிப்பு குடோனில் 11 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் மாநில சுமை தூக்குவோர் பாதுகாப்பு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்கள், அண்மையில் சங்க நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாவட்டத் தலைவர், அண்ணாமலை, சிவகாசியில் இருந்து ராஜபாளையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு சிவகாசியில் பணியாற்றிய மாவட்ட செயலாளர், செல்லச்சாமியை அருப்புக்கோட்டைக்கும், திருச்சுழியில் பணியாற்றிய பொருளாளர், மாரிமுத்துவை சிவகாசி பகுதிக்கு பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த மாறுதலை கண்டித்து,
சாத்தூர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் புதன் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாத்தூர் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளுக்கும் சத்துணவு கூடங்களுக்கும் தடையில்லாமல் கிடைப்பதற்கு மாற்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி. பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.