விஷ்வகுருவின் ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியற்றவர்களாக வாழும் இந்தியர்கள் !

பாக்கிஸ்த்தான், லிபியா, ஈராக், நைகர் மற்றும் போர் பதற்றச்சூழலில் சிக்கியிருக்கும் பாலத்தினத்தில் வாழும் மக்களைக்காட்டிலும் மகிழ்ச்சியற்றவர்களாக நமது இந்திய மக்கள் இருக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விஷ்வகுருவின் ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியற்றவர்களாக வாழும் இந்தியர்கள் !

லக மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கை 2024 ஓர் அலசல். கடந்த, மார்ச் 13, புதன்கிழமையன்று மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கை (World happiness Report- WHR)  வெளிவந்தது.   WHR என்பது ஐக்கிய நாடுகள் சபையின் (U.N) நிலையான வளர்ச்சி இலக்குகளை ஆதரிப்பதற்காக, 2012 இல் கேல்லப் (gallup), ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையம் மற்றும் WHR-ன் ஆசிரியர் குழுவுடன் இணைந்து  தொடங்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகும்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இந்த கூட்டமைப்பு வெளியிட்ட 2024-க்கான அறிக்கையின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான பட்டியலில், தொடர்ந்து ஏழாவது முறையாக பின்லாந்து முதல் இடத்தைப்பிடித்து சாதனை படைத்துள்ளது.

143 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 126 வது இடத்தில் உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் விஷ்வகுருவின் ஆட்சியின் கீழ் நமது இந்திய மக்கள், பாக்கிஸ்த்தான், லிபியா, ஈராக், நைகர் மற்றும் போர் பதற்றச்சூழலில் சிக்கியிருக்கும் பாலத்தினத்தில் வாழும் மக்களைக்காட்டிலும் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. காரணம் இந்த பட்டியலில் மேற்குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் தரவரிசையில் இந்தியாவை விட முன்னே உள்ளன.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பின்லாந்தை தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, லக்ஸம்பர்க், ஸ்விட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.  ஆஃப்கானிஸ்த்தான் கடைசியிடத்தில் உள்ளது.

இந்தியாவில் முறையான கல்வியில்லாதவர்கள்,  பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் ஆகியோருடன் ஒப்பிடும்போது,  இடைநிலை அல்லது உயர்கல்வி பெற்ற முதியோர்களும், சாதிய அடுக்கில் மேலே உள்ளவர்களும், உயர்ந்த வாழ்க்கைத்தரத்துடன் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த ஆய்வில் முதல் முறையாக அமெரிக்கா முதல் 20 இடங்களில் இருந்து பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது. அங்கு குழந்தை மற்றும் இளமைப்பருவங்களில் இருப்பவர்களைக்காட்டிலும் 30 வயதை கடந்தவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வயது வரம்பு கூடும்போது மகிழ்ச்சியிக்கான குறியீடுகள் சரிவதையும் இந்த அறிக்கை மூலம் அறியமுடிகிறது.  இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியாவில் கம்யூனிச கொள்கையின் வழிவந்த நாடுகளான ஸ்லோவேனியா, செக்கியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளின் செயல்பாடுகளால் அவை முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளன. இங்குள்ள இளைஞர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளைகாட்டிலும் சிறப்பான வாழ்நிலையை கொண்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியரான ஜான்-இம்மானுவேல் டி நெவ், தெரிவித்தார்.

மகிழ்ச்சியின் பக்கங்களை காட்டும் குறியீடுகளைத்தாண்டி வெளியே வந்தோமேயானால் உலகில் மூன்றில் ஒருவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும், உலகில் இருபத்தி மூன்று மில்லியன் மக்கள்.

ஸ்கிசோஃப்ரினியாவின் (எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் மனக் கோளாறு) அறிகுறிகளை அனுபவிப்பதாகவும், அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு இலட்சம் நபர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தெரியவந்துள்ளது. மேலும், ஏகபோக – முதலாளித்துவ நாடுகளுக்குள், இதய நோய் மற்றும் புற்றுநோய்க்குப் பின்னால் ஆயுட்காலம் குறைவதற்கு மனநலக் கோளாறுகள் முக்கிய காரணமாக அமைகிறது என்கிற உண்மையும் வெளிவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், பதினெட்டு முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட வயது வந்தோரில் 27.0 சதவீதம் பேர் மனநலச் சிக்கல்களை அனுபவிப்பதும், மேலும், இங்கிலாந்தில் மட்டும் கடந்த இரண்டு தசாப்தங்களாக கடுமையான மன அழுத்தம் மக்கள் மத்தியில் படிப்படியாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.  போக பதினாறு வயதுக்கு மேற்பட்டோருக்கான மக்கள் தொகையில் பல்வேறு வகையான மனச்சோர்வு அல்லது பதட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1993 இல் 14.1 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, 2014 ஆம் ஆண்டில், 17.5 சதவிகிதம் என்பதை மிக சமீபத்திய தேசிய சுகாதார சேவை வயது வந்தோர் மனநோய் நோய்க்குறி ஆய்வு விளக்குகிறது.

மனஅழுத்தம் பற்றி நாம் விவாதிக் கும் போது, முதலாளித்துவ சமூகத்தில் மன அழுத்தத்தை உயிரியல் காரணிகளை கொண்டு ஆராய்வதிலும் அவற்றிற்கான மருந்து விற்பனைகளை அதிகரிப்பதுமே அதீத கவனம் செலுத்தப்படுகிறது. போக, மனஅழுத்தத்திற்கான மரமணு சார்ந்த ஆராய்ச்சியிலும் பலர் இறங்கியிருக்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதன் விளைவாக மூளையில் உள்ள இரசாயன மாற்றங்கள் காரணமாகவும், செரோடோனின் மற்றும் டோபமைன்  போன்ற நரம்பியக்கடத்திகளின் செயல்பாட்டில் ஏற்படும் தாக்கங்களுமே மனஅழுத்தத்திற்கான காரணிகள் என நிறுவ இவர்கள் முயலுகிறார்கள். எனினும் மரபணு ரீதியான எந்த அடிப்படையும் இவர்களது ஆராய்ச்சிகளால் நிறுவமுடியவில்லை என்பது மட்டுமல்ல பலவித மன அழுத்த வடிவங்களுக்கு பொருத்தப்பாடான காரணிகளை கண்டடைய முடியாமல்,   இருக்கக்கூடிய உயிரியல் காரணிகளை கொண்டே இவற்றுக்கான முடிவுரையை எழுதமுற்படுகிறார்கள்.

இதன்மூலம் நாம் அறியமுடிவது என்னவென்றால், மக்களின் மனநலம் மற்றும் சமூக நிலைமைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவு பெரும்பாலும் மறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மன அழுத்தத்திற்கு பின்புள்ள சமூக காரணிகள் புறம்தள்ளப்பட்டு வெறுமனே          உயிரியல் -மருத்துவக் கட்டமைப்பிற்குள் அறிவியல் சொற்களால் அவை மூடப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகத்தான் தான் மனஅழுத்தம் குறித்தான காரணிகளை ஆராயுமிடத்தில் அந்த குறிப்பிட்ட மக்கள் வாழும் சமூகத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளின் பங்கையும் சேர்த்து ஆராயவேண்டும் என்கிறோம். மன அழுத்தமானது எப்படிப்பட்ட சமூக அமைப்பில் குறைவாகவும், அதிகமாகவும் இருக்கிறது என ஒப்பிட்டு அதற்கான சரியான தீர்வை நம்மால் எட்டமுடியும்.  இந்த காரணிகளை ஆராயும் நமக்கு புலப்படுவது என்ன வென்றால் முதலாளித்துவ சமூகத்தில் வாழும் மக்கள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதுதான்.

“சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை இல்லாத ஒரு சமூகத்தில்தான் மனஅழுத்தம் என்பது அறவேயில்லாமல் நீங்கும்”, என்று புகழ்பெற்ற மார்க்சிய அறிஞரான  இயன் பெர்குசன் நமக்கு எடுத்துரைக்கிறார்.  ஒரு மனிதன் முறையான மன ஆரோக்கியத்துடன் வாழ அவர் வாழ்வதற்கு தேவையான அடிப்படையான பொருட்களை பெருவதற்கான செல்வத்தை ஈட்டுவதில் அவருக்கு எந்த தடைக்கற்களும் உட்புகாமல் இருத்தல் வேண்டும் என்பது முதற்படி. ஆனால், முதலாளித்துவ சமூகத்தில் இது எல்லா மக்களுக்கும் சாத்தியப்படாத ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

முதலாளித்துவ சமூகத்தில் ஓய்வு மற்றும் செயலற்ற தன்மை ஆகிய இரண்டுக்குமான இடைவெளி கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.

வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டின் நோக்கமும், நுகர்வை  அதிகரிக்கச் செய்வதைதாண்டி வேறில்லை என்ற கட்டத்திற்கு மக்களை நகர்த்துகிறார்கள்.

ஒரு பொருளானது அவற்றின் பயன்பாட்டிற்காக  நுகரப்படுவதில்லை, நுகர்வு என்பது ஒரு தனிநபரின் சமூக நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு வழிமுறையாக மட்டுமின்றி சமூக கௌரவத்தின் அடையாளமாகவும் மாறிவிட்டதை நாம் காணமுடிகிறது. ஏனெனில் பழைய தயாரிப்புகளை புதியவற்றிற்கு மாற்றுவதற்கான விருப்பமும்கூட அந்த பொருளின் வாழ்நாள் இருப்பைத்தாண்டி, சமூக அந்தஸ்தை வெளிப்படுத்தும் பொருட்டு புதியவற்றை வாங்கித்தீர வேண்டிய கட்டாயத்தை காட்டுகிறது.

எவ்வாறாயினும், நுகர்வுத்தன்மையானது இறுதியில் அதிருப்தியை மட்டுமே வளர்க்கிறது. நீங்கள் எவ்வளவு குறைவாகச் சாப்பிடுகிறீர்களோ, குடிக்கிறீர்களோ, புத்தகங்கள் வாங்குகிறீர்களோ, சினிமாவுக்கும், சுற்றுலாவுக்கும், சிற்றுண்டி விடுதிக்கும் எவ்வளவு குறைவாகப் போகிறீர்களோ, எவ்வளவு குறைவாகச் சிந்திக்கிறீர்களோ, காதலிக்கிறீர்களோ, பேசுகிறீர்களோ, பாடுகிறீர்களோ, குடும்பத்தோடு நேரம் செலவிடுகிறீர்களோ, விளையாடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் சேமிப்பீர்கள், உங்கள் செல்வம், உங்கள் மூலதனம், நீங்கள் திரட்டியிருக்கும் பொருள்கள் அதிகரிக்கும்.

உங்கள் நுகர்வுத் தேவையை பூர்த்திசெய்ய இப்படியான வாழ்க்கைமுறைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும் என்று நமக்கான அறிவுறையை முதலாளித்துவ வல்லுனர்களும் எடுத்துறைக்கிறார்கள்.

சமூக ஏற்றத்தாழ்வுகள், ஆண்-பெண் சமத்துவமின்மை, நிலையான வாழ்க்கையின்மை, வெறும் 2% பணக்காரர்களிடம் 80% செல்வவளம் கடைநிலை 50% மக்களிடம் வெறும் 3% செல்வம் என செல்வ பாகுபாடு, மனிதர்களை பாகுபடுத்தும் மதவெறி, நிறவெறி மற்றும் சாதிவெறி, போதிய ஊட்டச்சத்தின்மை, நாடுகளுக்கிடையேயான போர்பதட்டம் என எல்லாமும் முதலாளிய சமுதாயத்தின் விளைவுகள். இப்படிப்பட்ட சுரண்டல் தன்மை கொண்ட சமூக பொருளுற்பத்தி முறையை, புறந்தள்ளிவிட்டு அகக்காரணிகளை மட்டும் கணக்கில் கொண்டு நம்மால் மனஅழுத்தத்திற்கான தீர்வை எக்காலமும் எட்டமுடியாது.

பாண்டியன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.