அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மனிதர்களை ஒன்றிணைக்கும் “உலக கருணை தினம்”

திருச்சியில் அடகு நகையை விற்க

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13ஆம் தேதி உலக கருணை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மனிதனின் அடிப்படை பண்பான தயை மற்றும் கருணை என்பவற்றை நினைவூட்டும் ஒரு சிறப்பான நாளாகும்.

1998ஆம் ஆண்டு World Kindness Movement எனப்படும் உலகளாவிய அமைப்பு  பல நாடுகளின் “கருணை சார்ந்த” தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாகி, இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது. அதன் நோக்கம், எல்லைகளைத் தாண்டி மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு, மரியாதை, மற்றும் கருணை காட்ட வேண்டும் என்பதே.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்நாள் தற்போது கனடா, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, இந்தியா போன்ற பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர் 2009ஆம் ஆண்டு முதல் உலக கருணை தினத்தை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடத் தொடங்கியது.

இங்கிலாந்தில், டேவிட் ஜமில்லி மற்றும் லூயிஸ் பர்ஃபிட்-டான்ஸ் இணைந்து “Kindness Day UK”யை ஆரம்பித்தனர். 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் New South Wales Federation Parents and Citizens Association, பள்ளிக் கல்வித் துறையில் உலக கருணை தினத்தை சேர்க்கும் முயற்சியைத் தொடங்கியது. பின்னர், 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கல்வி அமைச்சரான பீட்டர் காரட், நாட்டின் 9000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்த தினத்தை அதிகாரப்பூர்வமாக சேர்த்தார்.

https://www.livyashree.com/

உலக கருணை தினம்
உலக கருணை தினம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இன்று உலகம் முழுவதும் பல பள்ளிகளும் Be Kind People Project, Life Vest Inside போன்ற தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து கருணை தினத்தை உற்சாகமாகக் கொண்டாடுகின்றன. அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் ஆளுநராக இருந்த மேரி பஷீர் அவர்கள் அரச மாளிகையில் விழா நடத்தி “Cool To Be Kind” விருதையும் பெற்றார். பல நாடுகளில் கருணையைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.“The Big Hug”, Kindness Cards வழங்கல், Global Flashmob (15 நாடுகளில், 33 நகரங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது), கனடாவில் Kindness Concert, சிங்கப்பூரில் 45,000 மஞ்சள் மலர்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

2017இல் ஸ்லோவேனியாவிலும் “Randomised Kindness” என்ற திட்டத்தின் மூலம் உலக கருணை தினம் கொண்டாடப்பட்டது. உலக கருணை தினம், சமூகத்தில் உள்ள நல்ல செய்கைகளை வெளிப்படுத்தி, மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தியான கருணையின் தாக்கத்தைக் குறிப்பிடுகிறது. கருணை என்பது மதம், இனம், பாலினம், அரசியல் அல்லது நாட்டுப்பிரிவு என்றெல்லாம் பார்க்காத மனிதத்தின் பொது மொழி.

அது ஒருவரின் இதயத்தில் இருந்து பிறக்கிறது; ஒரு சிறிய புன்னகையால், ஒரு நன்றிச் சொல்லால், ஒரு உதவி கையால் உலகத்தை மாற்றும் வல்லமை அதற்குண்டு. “Kindness is a bridge that connects hearts , beyond race, religion and nation.”

அதுவே உலக கருணை தினம் நமக்குக் கற்றுத் தரும் முக்கியமான பாடம்.

 

—   மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.