இலக்கியத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நம்பிக்கை ஒளி – கவிஞர் ஆங்கரை பைரவி ! யாவரும் ..கேளீா்..தமிழியல் பொதுமேடை-தொடா்18

0

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் முன்னெடுக்கப்படும், யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 0-ஆம் நிகழ்வு, கடந்த  22.03.2025 அன்று நடைபெற்றது. ரெங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் ஆங்கரை பைரவியின் படைப்புகள் குறித்த கலந்துரையாடலாக அமைந்திருந்தது. படைப்பாளர் ஆங்கரை பைரவியுடன்  பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் மற்றும் பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

தனது படைப்புகள் குறித்த பார்வையை விளக்கத் தொடங்கினார், ஆங்கரை பைரவி.  “என் கவிதைகள் அனைத்தும் சமூகம் சார்ந்தவை என்றாலும் பெண்ணியம் சார்ந்தவையாகும். ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை எழுதியிருந்தாலும் 750-க்கும் மேற்பட்ட கவிதைகள் பெண்ணியம் சார்ந்தவை. நான் வாழ்க்கையை அழகியலாகப் பார்க்கவில்லை. வாழ்க்கையாகவே பார்க்கிறேன். என்னிடம் பழைய சோறு இருக்கிறது என்றால் அதையே நான் சாப்பிடுகிறேன். என்னிடம் இருப்பதைக் கொண்டே நான் வாழ்கிறேன். எல்லாரும் பூக்களை வரைகிறார்கள். நான் இதயத்தை வரைகிறேன், அவ்வளவுதான் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். எல்லாரும் பொம்மைகளை வரைகிறார்கள். அந்தப் பொம்மைகளுக்கு உயிர் கொடுக்க நான் கண்களை வரைகிறேன்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

கவிஞர் ஆங்கரை பைரவி
கவிஞர் ஆங்கரை பைரவி

”மலடிப் பட்டம் தந்த வலியை / உறிஞ்சு எடுக்கிறது குழந்தை / காம்புகளின் வழியே” என்ற கவிதை கல்கியில் வெளிவந்தது.

“நாய் காலைத் தூக்கிறது / பன்றி சாக்கடையில் புரள்கிறது / சேற்றில் புரண்ட மாடு உரசுகிறது / ஆடு இடது வலதாய் உரசி அரிப்பை போக்குகிறது / சுத்தமான சுவர்களைக் கண்டால் / விட்டு வைப்பதில்லை விலங்குகளும்” என்ற கவிதை எள்ளல் சுவைக்கு உதாரணம்.

ஆங்கரை பைரவியின் கவிதைகளில் உள்ள எள்ளல் சுவை என்பது தன் தாயிடமிருந்தும், இரண்டு தமக்கை மற்றும் இரண்டு தங்கைகளிடமிருந்து கற்றுக்கொண்டது. அம்மாவை இறுதி வரை பராமரித்து வந்தேன். கோயில்களில் அர்ச்சகர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பாக்கியமாக இருக்கும் தாயைப் பார்த்துக்கொள்வது, தாயைக் குளிப்பாட்டுவது, மலம் அள்ளுவது என்று அம்மாவுக்காக வாழ்ந்த வாழ்க்கைதான் என்னை இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை. அதனால்தான், பெண்கள் மீது எனக்கு எப்போதும் உயர்வான மதிப்பு இருந்துகொண்டே இருக்கின்றது.

சில பேராசிரிய நண்பர்கள் நான் நிகழ்ச்சிக்குச் செல்கிறேன் எனக்குச் சில கவிதைகளைச் சொல்லுங்கள்… உடனே சொல்லுங்கள் என்பார்கள். குறித்துக்கொள்ளுங்கள் என்று,

கவிஞர் ஆங்கரை பைரவி”வாகனங்களின் சக்கரங்களை இயக்க / மீசை முறுக்கவேண்டாம். / வாழ்க்கை சக்கரங்களை / பெண்ணே இயக்கிக் கொண்டிருக்கிறாள்” – என்று கூறுவேன்.

“தாண்டில் புரட்சி / மிதித்தால் படிக்கட்டு / அழித்தால் சாதனை / சொல். என்ன செய்வதாய் உத்தேசம் / சரிபடுத்தும் கோடுகளை” –  என்று சொல்வேன்.

பெண்ணியம் சார்ந்த கவிதையில் எல்லாராலும் பாராட்டப்பட்ட கவிதை,

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

“பாட்டி முறத்தால் விரட்டினாள் / அம்மா அறத்தால் அடித்து விரட்டினாள் / மகள் அரி (றி)வால் அடித்து விரட்டினாள் “ – பெண்களை இழிவு படுத்தும் இரண்டுகால் விலங்குகள் என்ற கவிதையில் அறிவால் என்பது புத்திக்கூர்மையோடும், அரிவாள் என்னும் ஆயுதத்தோடும் என்ற வரிகளை எல்லாரும் இரசித்தனர்.

அரசியல் கவிதை ஒன்றில்,

“எத்தனை முறை புரட்டிப் போட்டாலும் / எங்கள் பிள்ளைகளிடம் வேகாது / உங்கள் தோசைகள்” என்ற கவிதையில் நடப்பு அரசியலை விளக்கியுள்ளேன்.

கல்விச் சூழலில் மொழி எப்படி ஆளுமை செலுத்துகிறது என்றால், தமிழ்நாட்டுச் சூழலில் இருமொழிக் கொள்கையே சிறந்தது. இந்தி ராமர் மொழியா, பாபர் மொழியா என்று ஒரு கவிதை எழுதினேன்.

மேலும், ”பள்ளிப் பிள்ளைகள் உணவில் ,கலப்படம் வாந்தி எடுத்தனர் “ – இந்திதான் கலப்படம் என்று கவிதை எழுதினேன். இந்தக் கவிதை எல்லா மட்டங்களிலும் எனக்கு ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது. வாழ்வதற்குத் தமிழும், வாழ்வாதரத்திற்காக ஆங்கிலம் என்பதாகவே நான் உணர்கிறேன்.

நந்தன் இதழ் ஆசிரியராக ஐயா சுப.வீ. இருந்தார். நான் தொடர்ந்து நந்தன் இதழில் எழுதிக் கொண்டிருந்தேன். பின்பு காலம் மாறியது சுப.வீ. அவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது நான்தான் கடிதம் எழுதினேன். நான் எழுதும் கவிதைகளையும் நூல்களையும் அனுப்பி வைப்பேன். அப்படித்தான் எனக்கு நட்பு ஏற்பட்டது. முகநூலில் ஐயா பாலகிருஷ்ணன் எழுதும் பதிவுகளுக்கு நான் பதில் போடுவன். அதைப் பார்த்து அவர் என்னைப் பாராட்டுவார். இறையன்பு அவர்களின் நூல்களைப் படித்து கருத்துகளைப் பகிர்வேன். இப்படித்தான் இவர்களிடம் என் நட்பு பரவியது.

கவிஞர் ஆங்கரை பைரவிஆங்கரையில் உள்ள என் இல்லத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு நூலகம் அமைத்துள்ளேன். அங்கே இலக்கியக் கூட்டங்களை நடத்துவேன். சில வேளைகளில் நாடகங்களைக்கூட நடத்தியிருக்கிறேன். பேராசிரியர் சதீஷ்கூட என் வீட்டின் முன் நடந்த நாடகங்களில் நடித்திருக்கிறார். கட்டுரைகளை எழுதி நூலாக்கம் செய்துள்ளேன். கவிதை எழுதுவோருக்குச் சிறுகதை எழுதவராது என்றார்கள். நான் பல சிறுகதைகளை எழுதி ஒரு தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன். உயிர் எழுத்து சுதீருக்குத்தான் இந்த நேரத்தில் நன்றி சொல்லவேண்டும். சமூகத்திற்குத் தேவைப்படும் கருத்துகளை எந்த வடிவில் தந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியே அந்த வடிவங்களைத் தேர்வு செய்து கருத்துகளைப் பதிவு செய்கிறேன். இலக்கியத்திற்காக என்றும் நான் இயங்கிக் கொண்டே இருப்பேன்” என்று உரையை நிறைவு செய்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெ.டி.ஆர் பயனடைகள் அணிவித்து, அங்குசம் இதழ்களை அன்பளிப்பாக வழங்கினார். ஆங்கரை பைரவி என்னும் எளிய மனிதரின் இலக்கிய முயற்சிகள் எல்லாம் எல்லாரும் அறிந்துகொள்ளும் வகையிலும் விளங்கிக் கொள்ளும் வகையிலும் எளிமையாக இருந்தது. இதுபோன்ற நம்பிக்கையொளிதான் இலக்கியத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையில்லா உண்மையாகும்.

 

—            ஆதவன்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.