தமிழின் முதல் பின்னணி பாடகர் – திருச்சி லோகநாதன் ! இலால்குடி முருகானந்தம் புகழ் இசையுரை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Sri Kumaran Mini HAll Trichy

அங்குசம் அறக்கட்டளை சார்பில் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை நிகழ்வில், கடந்த 14.06.2025 ஆம் நாள் சனிக்கிழமை மாலை திருச்சி லோகநாதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ் விழாவில் பன்முக கலைஞர், வண்டமிழ் வானம்பாடி இலால்குடி முருகானந்தம் இசையுரை நிகழ்த்தினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து இலால்குடி முருகானந்தத்திற்குப் பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் சிறப்புரையாளருக்கு நூல்கள் வழங்கி சிறப்பித்தார்.

யாவரும் கேளீா் - 23இந் நிகழ்வில் திருச்சி லோகநாதன் குறித்து தொடக்கவுரையாற்றிய பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், “திருச்சி மலைக்கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். லோகநாதன் நகைச்சுவை நடிகை சி.டி.இராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார். இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்ரவர்த்தி (‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடலை நிழல்கள் திரைப்படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தன் தந்தை பெயர் சுப்ரமணியம் என்றிருக்க லோகநாதன் தன் பெயருக்கு முன்னெழுத்தாக S என்ற ஆங்கில எழுத்தைப் பயன்படுத்தாமல் திருச்சியைத் தன் தந்தையாகக் கொண்டு T என்பதைப் பயன்படுத்தியதன் மூலம் பின்னணி பாடகர் லோகநாதன் திருச்சிக்குப் பெருமை சேர்த்துள்ளார்” என்றார்.

இலால்குடி முருகானந்தம்
இலால்குடி முருகானந்தம்

இதனை தொடர்ந்து, இசையுரையாற்றிய இலால்குடி முருகானந்தம் “தமிழ் திரையுலக வரலாற்றில் கதாநாயகனாக நடித்த எம்.கே.டி.தியாகராஜ பாகதவர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் பாடல்களைத் தானே பாடி நடித்தார்கள். அப்போது பின்னணி குரலில் பாடுவது என்பது நடைமுறையாக இல்லை. கதாநாயகனாக நடித்தவர்களுக்கு முதன்முதலில் பின்னணி பாடல்களைப் பாடிய பெருமை திருச்சி லோகநாதனுக்கு மட்டுமே உரியது. இவர் பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், அபிமன்யு திரைப்படத்தில் சகாதேவனாக நடத்தும் இருக்கிறார்.

திருச்சி லோகநாதன் இளமையில் நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். தொடர்ந்து ஜி.இராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடிவந்தார். 1947இல் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான இராஜகுமாரியில் எஸ்.எம்.சுப்பையா நாயுவின் இசையமைப்பில் கே.வி.ஜானகியோடு இணைந்து பாடினார் என்பது திருச்சி லோகநாதனுக்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.

திருச்சி லோகநாதன்
திருச்சி லோகநாதன்

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்.

சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார். மொத்தம் 4,000 ரூபாய். அப்போது தங்கம் விலை ஒரு பவுன் 50 ரூபாய்தான். தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல “மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரைப் பாடச் சொல்லுங்க” என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர் டி.எம். செளந்தரராஜன் ஆவார்.

20 பாடகிகளோடு திருச்சி லோகநாதன் பாடியுள்ளார். ஆண் பாடகர்களோடு 15 பேராடு இணைந்து பாடியுள்ளார். கலைவாணர் உள்ளிட்டவர்களோடு இணைந்து பாடியுள்ளார்.

யாவரும் கேளீா் - 23அவர் பாடிய பாடல்களில் மக்களின் கவனத்திற்கு வராத பாடல்களில் ஒன்று “ மண்ணில் பலவித பிரிவினையாலே…..” என்னும் இந்தப் பாடல் சமகாலத்தில் சமூகத்தில் நிலவும் பல்வேறு சமூக நிகழ்வுகளின் இழித்தன்மையைச் சிறப்பாக பாடியுள்ளார்.

அந்தக் காலத்தில் ஆங்கிலம் மோகம் இருந்தது. ஏபிசிடி படிக்கிறேன்…. இ எப் ஜி எச் எழுதுறேன்…. ஆபிஸர் போல் நடிக்கிறேன்…. என்று ஆங்கிலத்தில் தவறாக பொருள் புரிந்துகொண்டதைப் பாட்டாக பாடியுள்ளார். ஊராரும் உறங்கையிலே…. உற்றாரும் உறங்கையிலே…. என்று ஆணும் பெண்ணும் கேள்வி பதில் முறையில் அமைந்த இந்தப் பாடலை லோகநாதன் சிறப்பாக பாடியிருப்பார்.

மந்திரிகுமாரியில், வாராய் நீ… வராய் என்ற பாடலை லோகநாதன் பாடியிருப்பார். காட்சியில் காதலன், தன் காதலியை மலையின் முகட்டிற்கு அழைத்துச் செல்ல அழைப்பார். அவளைக் கீழே தள்ளி கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் பாடல் அமைந்திருக்கும். போகுமிடம் வெகுதூரமில்லை…. நீ வாராய் என்று மிக அழகாக பாடியிருப்பார். இது குண்டலகேசி என்ற காப்பியத்திலிருந்து இந்த கதை எடுத்தாளப்பட்டிருக்கும்.

Flats in Trichy for Sale

சின்னக்குட்டி நாத்துனா சில்லறைய மாத்துனா…. என்ற பாடல், ஆசையே அலைபோல… என்ற பாடல், வண்ணக்கிளியில் நடிகர் மனோகருக்குப் பின்னணி பாடலாக, அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பாடலில் வரும் விக்கலையும் ஒரு இசையாக லோகநாதன் பாடியிருப்பார். பாரதியாரின் பாடலான என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் என்ற பாடலை பாடி பாரதிக்குப் பெருமை சேர்த்திருப்பார். லோகநாதனுக்குப் பெரும் புகழைப் பெற்று தந்த பாடல், மாயாபஜார் படத்தில் ரெங்கராவ் நடிக்க லோகநாதன் குரலில், கல்யாண சமையல் சாதம்…. ஆஹா….அஹா….. என்று ஹஸ்யமாக பாடி அப் பாடலுக்குச் சிறப்பு சேர்த்திருப்பார்.

யாவரும் கேளீா் - 23திருச்சியில் பிறந்து, திருச்சிக்குப் பெருமை சேர்த்த பெருமக்களுள் திரையிசை பின்னணி பாடகர் திருச்சி லோகநாதனுக்குச் சிறப்பிடம் உண்டு. அவரின் நூற்றாண்டு விழாவில் அவர் பாடிய பாடல்களைப் பாடி அவரை நினைவுப்படுத்தும் இந்த விழா கொண்டாடப்படுவது சிறப்பு.” என்று உரையை நிறைவு செய்தார்.

இவ் விழாவில் கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் சார்ந்த பொறுப்பாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், அந்தநல்லூர் வட்டார கல்வி அலுவலர் திருமதி ஜெயலெட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் அங்குசம் இதழ்களைச் சிறப்புரையாளருக்கு வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்வை முழுமையாக கேட்க: https://www.youtube.com/watch?v=viXCCjk_aV8&t=452s

திருச்சி லோகநாதன் பாடிய பாடல்களில் புகழ்பெற்றவை

கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)

ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)

அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி)

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்)

உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)

வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபகாவலி)

பொன்னான வாழ்வு (டவுன்பஸ்)

 

 — ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.