ஆசையோடு காத்திருந்த வாலிபா் ! மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி !
திருமணம் முடித்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிா்ச்சி
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே திண்டமங்கலதானூரை சேந்தவர் கருப்பட்டி வியாபாரி அர்ஜுனனின் மகன் 37 வயதான பிரகாஷ், இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமணம் செய்ய புரோக்கர் மூலம் குடும்பத்தினர் பெண் பார்த்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சங்ககிரி வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த மணி மற்றும் ஈரோடு விஜயமங்கலத்தைச் சேர்ந்த வள்ளி ஆகியோர் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி என்ற பெண்ணை மணப்பெண்ணாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களுடன் 3 பேர் சேர்ந்து ஒரு குடும்பத்தைப் போல பிரகாஷ் மற்றும் பிரியதர்ஷினிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி ஜலகண்டாபுரத்தில் உள்ள நாச்சம்பட்டி சித்தேஸ்வரர் கோவிலில் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
இதையடுத்து திருமணம் முடிந்ததும் பிரியதர்ஷினி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சரிவர பேசாமல் வீட்டிலேயே முடங்கி இருந்ததால் சந்தேகம் அடைந்த பிரகாஷின் குடும்பத்தினர் உனக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது பிரியதர்ஷினி ஏற்கனவே திருமணமானவர் என்றும், ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்வதாகவும், இரண்டாவது திருமணம் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் புரோக்கர் மணியை தொடர்பு கொண்டு பேசிய போது சரியாக பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசி உள்ளார். ஏற்கனவே திருமணமான பெண்ணை ‘பொய் சொல்லி ஏமாற்றி தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாக அர்ஜுனன் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணமான பெண்ணை மீண்டும் பிரகாஷுக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதற்கு மணப்பெண்ணும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே புரோக்கர் மணி அவரது நண்பர்களான குமார், சக்திவேல், பெண் புரோக்கர் வள்ளி, தாயாக நடித்த செல்வி, சகோதரியாக நடித்த பிரியா, மணப்பெண் பிரியதர்ஷினி ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் செல்வி, பிரியா, திருமணம் செய்து மோசடி செய்த இளம்பெண் பிரியதர்ஷினி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான புரோக்கர் மணி அவரது நண்பர்களான குமார், சக்திவேல் புரோக்கர் வள்ளி ஆகிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் தான் இதை போல் திருமணமான பெண்களை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்தார்களா? என்பது தெரிய வரும் என ஜலகண்டாபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் திருமணமான பெண்ணை பணத்துக்காக மீண்டும் ஒரு வாலிபருக்கு ஏமாற்றி திருமணம் செய்து வைத்த இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.